சீசன் டிக்கெட் செல்லுமா? ரயில் பயணிகள் குழப்பம்| Dinamalar

சீசன் டிக்கெட் செல்லுமா? ரயில் பயணிகள் குழப்பம்

Added : மே 12, 2020
Share
பொள்ளாச்சி:வாடிக்கையாக ரயலில் பயணிப்போரிடையே, ஊரடங்குக்கு முன் வாங்கிய 'சீசன் டிக்கெட்' எது வரை செல்லுபடியாகும் என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது.பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு தினமும் அலுவலகம், கல்லுாரி சென்று வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தினசரி ரயிலை பயன்படுத்துகின்றனர். அதில், 70 சதவீதம் பேர், 'சீசன் டிக்கெட்' எடுத்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா

பொள்ளாச்சி:வாடிக்கையாக ரயலில் பயணிப்போரிடையே, ஊரடங்குக்கு முன் வாங்கிய 'சீசன் டிக்கெட்' எது வரை செல்லுபடியாகும் என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது.பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு தினமும் அலுவலகம், கல்லுாரி சென்று வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தினசரி ரயிலை பயன்படுத்துகின்றனர். அதில், 70 சதவீதம் பேர், 'சீசன் டிக்கெட்' எடுத்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. தொடர்ந்து, ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, 52 நாட்களுக்கு பிறகு வரும், 17 ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு, வெளிமாநிலங்களுக்கு ரயில் சேவை துவங்கப்படாவிட்டாலும், பயணிகள் ரயில்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ரயில் சேவை நிறுத்தப்படுவதற்கு முன், சீசன் டிக்கெட் எடுத்தவர்களிடையே குழப்பம் நிலவுகிறது. அந்த டிக்கெட்டை பயன்படுத்தி பயணம் செய்யவில்லை. ஆனால், டிக்கெட்டின் தேதி, காலாவதி ஆகிவிட்டது.அதே டிக்கெட்டை, ரயில்கள் இயங்க துவங்கிய பிறகு பயன்படுத்த முடியுமா, இல்லை, பணம் நஷ்டம் ஆகுமா என்று பலத்த சந்தேகம் நிலவுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம், தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X