பொது செய்தி

இந்தியா

468 சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பிய 5 லட்சம் பேர்

Added : மே 12, 2020
Share
Advertisement

புதுடில்லி : 'இதுவரை இயக்கப்பட்டுள்ள, 468 சிறப்பு ரயில்கள் மூலம், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்' என, இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசம்ஊரடங்கால், வெளி மாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்க, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து, இந்திய ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெளி மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களை மீட்டுவர, 1ம் தேதி முதல், 468 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில், 363 ரயில்கள், தங்கள் இலக்கை அடைந்துவிட்டன. அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்திற்கு, 172 ரயில்களும், பீஹாருக்கு, 100 ரயில்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்கள், குஜராத் மற்றும் கேரளாவில் இருந்து அதிக அளவில் இயக்கப்பட்டுள்ளன. இவ்விரு மாநிலங்களில் தான், வெளி மாநில தொழிலாளர்கள், அதிக அளவில் உள்ளனர். இதுவரை, ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பேர், சிறப்பு ரயில்களில் பயணித்து, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுஉள்ளனர். ஒவ்வொரு சிறப்பு ரயிலிலும், 24 பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ளன. ஒரு பெட்டியில், மொத்தமாக, 72 இருக்கைகள் உள்ளன. ஆனால், சமூக இடைவெளி பின்பற்றப்படுவதால், ஒவ்வொரு ரயில் பெட்டியிலும், 54 பேர் மட்டுமே பயணிக்கின்றனர்.

செலவு மொத்தமாக, ஒவ்வொரு ரயிலிலும், 1,200 பேர் பயணிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை, 1,700 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி, ஒவ்வொரு பெட்டியிலும், 72 பேர் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில் சேவைக்கும், 80 லட்சம் ரூபாய் வரை, செலவு செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X