மானாமதுரை கண்மாயை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

Added : மே 12, 2020
Share
Advertisement
மானாமதுரை:மானாமதுரை கண்மாய்க்குள் அதிகளவில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.மானாமதுரை கண்மாய்117 எக்டேர் பரப்பளவு கொண்டதாகும். 550 ஏக்கர் விவசாய நிலங்கள்கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர்.கடந்த 5 வருடங்களாக போதிய மழை பெய்யாததாலும், வைகையில் தண்ணீர் வந்தாலும்

மானாமதுரை:மானாமதுரை கண்மாய்க்குள் அதிகளவில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மானாமதுரை கண்மாய்117 எக்டேர் பரப்பளவு கொண்டதாகும். 550 ஏக்கர் விவசாய நிலங்கள்கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர்.கடந்த 5 வருடங்களாக போதிய மழை பெய்யாததாலும், வைகையில் தண்ணீர் வந்தாலும் இந்த கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய் கிருங்காக்கோட்டை அருகே முகத்துவாரத்தில் துார்ந்து கிடப்பதால் கண்மாயின் அனைத்து பகுதிகளிலும்கருவேல மரங்கள் வளர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், மானாமதுரை கண்மாயில் முழுமையாக தண்ணீர் தேங்கினால் மானாமதுரை பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் நன்கு உயரும்,மேலும் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்ய முடியும். ஆனால் தற்போது கண்மாய் முழுவதும் கருவேலமரங்கள் வளர்ந்து காணப்படுவதால் மழை பெய்தாலும் கண்மாயில்தண்ணீர் தேங்குவது கிடையாது.

தற்போது இந்த கோடை காலத்தில் கருவேல மரங்களை அகற்றினால் மழை காலத்தில்தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. மாவட்ட கலெக்டர் விவசாயிகளின் நலன் கருதி கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X