சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மும்பை தமிழர்களுக்கு பூவந்தியில் சோதனை

Added : மே 12, 2020
Share
Advertisement

பூவந்தி:பூவந்தி செக்போஸ்ட்டில் மும்பையில் இருந்து வந்த தமிழர்களுக்கு சோதனை
நடத்தப்பட்டது.

மும்பை போரிவாலி அருகே உள்ள கண்டிவாலியை சேர்ந்தவர் சம்பத்து 46, மும்பையில் கவரிங் நகை தொழில் செய்து வந்துள்ளார்.மும்பையில் வசித்த இவருக்கு கொரோனா வந்ததில் இருந்து தொழில் நடத்த முடியவில்லை. மேலும் கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் சொந்த ஊரான தமிழகம் வந்தனர்.

சம்பத்துவின் மாமனார் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே என்மணம்கொண்டான்கிராமத்தில் வசித்துவருகிறார். தமிழகத்தில் இனி வசிக்கலாம் என மும்பையில் இருந்த
வீடு, தொழிற்சாலை உள்ளிட்டவற்றை காலி செய்து விட்டு அனைத்து பொருட்களையும் லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு காரில் கடந்த 9ம் தேதி கிளம்பியுள்ளார்.நேற்று அதிகாலை அவர் சிவகங்கை மாவட்ட எல்லையான பூவந்திக்கு வந்தார்.

போலீசார் விசாரணை, மருத்துவ பரிசோதனை முடிந்தபின் உச்சிப்புளி புறப்பட்டு சென்றார். மும்பையில் இருந்து தொடர்ந்து வாழ்வாதாரத்தை இழந்து தமிழகம் வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X