வடுகபட்டியில் தொடரும் வாழைத்தார் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடுகபட்டியில் தொடரும் வாழைத்தார் திருட்டு

Added : மே 12, 2020
Share

பெரியகுளம்:வடுகபட்டியில் தினமும் 10 செவ்வாழை தார் திருடுபோவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெரியகுளம், வடுகபட்டி முக்கரை விநாயகர் கோயில் அருகே சவுந்தர், திரிசங்கு,அழகர் உட்பட 30க்கும் அதிகமான விவசாயிகள் 50 ஏக்கரில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.இங்கு செவ்வாழை, கற்பூரவள்ளி, ரஸ்தாளி, பூவன், உட்பட 7 வகையான ரகங்களில் வாழை
விளைச்சல் உள்ளது. இரவு நேரங்களில் தினமும் 10 மரத்திலிருந்து 10 செவ்வாழை தார் வெட்டி திருடப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் போதிய விலை இல்லாமல் சிரமப்படும்
விவசாயிகள் இந்த தொடர்திருட்டு சம்பவத்தால் கவலையடைந்துள்ளனர்.

இதுவரை 200க்கும் அதிகமான தார் திருடப்பட்டுள்ளது. போலீசார் ரோந்தில் ஈடுபட்டு இங்கு திருடுவோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடுகபட்டி வாழை
விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X