சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அணைப்பகுதியில்கரை ஒதுங்கிய மான்கள்

Added : மே 12, 2020
Share
Advertisement

உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி, உடுமலை வனச்சரக பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. முழுவதும் வனப்பகுதி வழியாக வரும், காண்டூர் கால்வாயில், குடிநீர் தேடி வரும் வன விலங்குகள் தவறி விழுந்து பலியாகும் சம்பவம் நடந்து வருகிறது.நேற்றுமுன்தினம் தண்ணீர் தேடி, 6 மற்றும் 5 வயதுடைய இரு, மான்கள் வந்துள்ளன. சரிவாக உள்ள கோமாளியூத்து பள்ளம் பகுதியில், மலைப்பாறை சரிவில் தவறி, காண்டூர் கால்வாயில் விழுந்து, திருமூர்த்தி அணைப்பகுதியில் கரை ஒதுங்கின.உடுமலை வனத்துறையினர் , மான்களின் சடலத்தை மீட்டு, சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து, பாதுகாப்பாக புதைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X