சிறுமி திருமணம் இருவர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி திருமணம் இருவர் மீது வழக்கு

Added : மே 12, 2020
Share

தேனி:தர்மாபுரி 42 வயது பெண், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட உதவியாளராக உள்ளார். இவரது 17 வயது மகளுக்கும், சோனைமுத்து 28, என்பவருக்கும் மே 7 ல் கமாட்சியம்மன் கோயிலில் திருமணம் நடந்தது.

மாவட்ட குழந்தைகள் நலக்குழு, போலீசாரின் உதவியுடன், சமூகநலத்துறை அலுவலகத்தில் ஆஜர்படுத்துமாறு பரிந்துரைத்தது. அதன்படி நேற்று அச்சிறுமி, தாய், தந்தை குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சுரேஷ்குமார், உறுப்பினர்கள் நாகேந்திரன், பழனிச்சாமி, சந்திரசேகரன் முன் ஆஜராயினர்.

விசாரணையில் கட்டாய திருமணம் செய்தது தெரியவந்தது. குழந்தைகள் நலக்குழு சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் சண்முகவடிவு, வீரபாண்டி போலீசாருக்கு சிறுமியின் தாய், திருமணம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். போலீசார் இருவர் மீதும், சிறுமி திருமண தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X