பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்பு அசத்துகிறது ஆலாங்கடவு அரசுப்பள்ளி

Added : மே 12, 2020
Share
Advertisement

ஆனைமலை;ஆனைமலை அடுத்த ஆலாங்கடவு அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், ஆன்லைனில் பாடம் நடத்தி அசத்தி வருகின்றனர்.ஆனைமலை அடுத்த ஆலாங்கடவு அரசு துவக்கப்பள்ளியில், 24 மாணவர்கள் படிக்கின்றனர். ஊரடங்கால் பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு தற்போது, ஆசிரியர்கள் 'ஆன்லைன்' மூலம் பாடம் நடத்தி அசத்தி வருகின்றனர்.'ஸ்மார்ட் போன்' செயலியில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துரையாடி, பாடங்களை கற்றுக்கொள்கின்றனர்.தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, ஆசிரியர் சிவராம் ஆனந்த் கூறியதாவது:ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் மாணவர்கள் அவ்வப்போது போன் செய்து, சந்தேகங்களை கேட்டு வந்தனர். அதன் பின் சிலர், 'வாட்ஸ்ஆப்' வீடியோ கால்களும் செய்தனர். இதையடுத்து, தனியார் கல்லுாரி, பள்ளிகளைப்போல, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பாடம் நடத்த திட்டமிட்டு, செயலி மூலம் ஆன்லைனில் பாடம் நடத்தி வருகிறோம். ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியாக பாடம் நடத்தி, 'ஹோம் வொர்க்' கொடுக்கிறோம். மாணவர்கள் பலரும் பாட புத்தகத்தில் உள்ள 'கியூஆர்' கோடு பயன்படுத்தி வீடியோ, ஆடியோ மூலம் பாடத்தை புரிந்து கொள்கின்றனர்.'ஸ்மார்ட் போன்' இல்லாத மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் மொபைல்போனை வழங்கி உதவி செய்கின்றனர். ஊரடங்கில் பள்ளி மூடியிருந்தாலும், மாணவர்கள் ஆர்வத்துடன் பாடம் கற்கின்றனர்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X