தமிழ்நாடு

யாரும் டீ, காபி குடிக்க கூடாதாம்... கடையை மட்டும் திறக்கணுமாம்!

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 யாரும் டீ, காபி  குடிக்க கூடாதாம்... கடையை மட்டும் திறக்கணுமாம்!

கோவை:பேக்கரி மற்றும் டீக்கடைகளில் அமர்ந்து, டீ குடிக்க அனுமதி இல்லாததால், டீக்கடை உரிமையாளர்கள் நொந்து போய் காணப்படுகின்றனர்.தமிழகத்தில் டீக்கடைகள் மற்றும் பேக்கரிகள் திறக்க அனுமதி கிடைத்துள்ளது. இதனால், கோவையில் நேற்று பல இடங்களில், பேக்கரி மற்றும் டீக்கடைகள் திறக்கப்பட்டன.
கடைக்குள் அமர்ந்தும், வெளியில் நின்றும் டீக்குடிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், டீ குடிக்க வந்த வாடிக்கையாளர்கள் பலர் திரும்பி சென்றனர்.'ஆள் இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துவது' என, புலம்புகின்றனர் டீக்கடைக்காரர்கள்.டீ குடிக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், 'பேக்கரிக்கு டீ குடிக்க வருவதே வடை, போண்டா, பப்ஸ் ஏதாவதும் சாப்பிட்டு விட்டு டீ குடிக்கத்தான். உள்ளேயும் உட்கார கூடாது, வெளியிலும் நிற்க கூடாது என்றால் என்ன செய்வது.
டீயை பார்சல் வாங்கி போய், எங்கு நின்று குடிப்பது. இது குழப்பமான அறிவிப்பு' என்றார்.பேக்கரி உரிமையாளர்கள் கூறுகையில், 'கடை திறந்து வைத்தும் பயனில்லை. பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப் பயன்படுத்த கூடாது என்ற உத்தரவு உள்ளது. இந்நிலையில், எப்படி கஸ்டமரால் பார்சல் வாங்கி போய், டீ குடிக்க முடியும். கூட்டம் சேர்ந்து நிற்காமல், சமூக இடைவெளியுடன் அமர்ந்து, டீ குடிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
12-மே-202016:33:39 IST Report Abuse
Ashanmugam டீ கடையை திறக்கனும், டீ குடிக்ககூடாது. டீ பார்சல் வாங்கி செல்லவேண்டும். இந்த முட்டாளின் யோசனைக்கு தமிழக மக்கள் அண்ணா சாலை, சென்னையில் சிலை வைக்க வேண்டும்
Rate this:
Cancel
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
12-மே-202009:59:28 IST Report Abuse
RADE தொழில் நகரம் kalilcகலில் கம்பனிக்கு டீ சப்ளை செய்யும் பேக்கரிகு மட்டும் அனுமதித்து இருக்கனும் அல்லது எல்லோரும் சமூக இடைவெளி விட்டு அருந்துபடி அறிவித்து இருக்கனும்.
Rate this:
Cancel
12-மே-202009:36:01 IST Report Abuse
ருத்ரா திட்டமிடல் இல்லாததால் இதுபோல் யாருக்கும் பயன்படாத வியாபார நஷ்டம் நடுத்தர ஏழை மக்களுக்கான கடை என்றால் சமூக இடைவெளி விட்டு பத்து ஸ்டூல் போடலாமே. Use and through cup better. இந்த நேரத்தில். கண்ணாடி கிளாஸ் சுத்தமாக கழுவ வேண்டும். கடை திறக்க அனுமதி தரும் முன் இது குறித்தும் ஆலோசிக்க வேண்டும் அல்லவா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X