பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தேடி வரும் அரிசி, முட்டை, சத்துமாவு 40 ஆயிரம் குழந்தைகளுக்கு

Added : மே 12, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் அங்கன்வாடி குழந்தைகள் 40 ஆயிரம் பேருக்கு தேவையான அரிசி, பருப்பு, முட்டை, சத்துமாவு வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,035 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு 2 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 42 ஆயிரம் பேர் பயில்கின்றனர். இவர்களுக்கு தினமும் மதியம் ஒரு வகை சாதம், முட்டை, சத்துமாவு வழங்கப்படுகிறது.தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் முதல் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் அக்குழந்தைகளுக்கு தவறாமல் உணவு கிடைக்க, ஒரு குழந்தைக்கு தினமும் 80 கிராம் அரிசி, 10 கிராம் பருப்பு, 10 கிராம் சத்துமாவு, வாரத்திற்கு 3 முட்டை வீதம் அங்கன்வாடி பணியாளர்கள் அக்குழந்தைகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வினியோகிக்கின்றனர்.

இதுவரை 40 ஆயிரம் குழந்தைகளுக்கு மே 17 வரை உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.இதே போல் 6 மாதம் முதல் 3 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு தினமும் 125 கிராம் சத்துமாவு, கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு தேவையான அளவு சத்துமாவு ஊரடங்கு காலம் முடியும் வரை தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணியில் அங்கன்வாடி உதவியாளர், பணியாளர் உட்பட 1,700 பேர் ஈடுபட்டுள்ளனர். வீடுகளுக்கு நேரடியாக செல்வதால் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களின் உடல்நிலை குறித்து அறிய தேவைப்பட்டால் நேரிலோ அல்லது அலைபேசி மூலம் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மீண்டும் அங்கன்வாடி மையங்கள் திறக்கும் வரை குழந்தைகளுக்கான உணவு வீடு தேடி சென்று வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X