கொரோனா நிதி... கொள்ளைக்கு சதி?| Dinamalar

'கொரோனா' நிதி... கொள்ளைக்கு சதி?

Added : மே 12, 2020
Share
கா ர்ப்பரேஷன் ஆபீஸ் வளாகம், 'ஜேஜே'வென இருந்தது. என்ன நடக்கிறது என, சித்ராவும், மித்ராவும் எட்டிப்பார்த்தனர். நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட, துாய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பெட்டி வழங்கும் பணி நடந்து கொண்டிருந்தது.அதைப்பார்த்த மித்ரா, ''என்னக்கா, துாய்மை பணியாளர்கள் மட்டும்தான் 'கொரோனா' தடுப்பு பணியில் ஈடுபட்டாங்களா, மத்தவங்க வேலை பார்க்கலையா,'' என,
 'கொரோனா' நிதி... கொள்ளைக்கு சதி?

கா ர்ப்பரேஷன் ஆபீஸ் வளாகம், 'ஜேஜே'வென இருந்தது. என்ன நடக்கிறது என, சித்ராவும், மித்ராவும் எட்டிப்பார்த்தனர். நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட, துாய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பெட்டி வழங்கும் பணி நடந்து கொண்டிருந்தது.அதைப்பார்த்த மித்ரா, ''என்னக்கா, துாய்மை பணியாளர்கள் மட்டும்தான் 'கொரோனா' தடுப்பு பணியில் ஈடுபட்டாங்களா, மத்தவங்க வேலை பார்க்கலையா,'' என, கொக்கி போட்டாள்.''மித்து, பொறுமையா இரு. அஞ்சாயிரம் போலீஸ்காரங்களுக்கு, செவிலியர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள்னு, மொத்தம், 20 ஆயிரம் பேருக்கு கொடுக்குறாங்களாம். வ.உ.சி., மைதானத்துல வச்சு, விழா நடத்தலாம்னு ஆலோசனை செஞ்சிருக்காங்க. அவ்ளோ பேரும் ஒரே இடத்துல திரண்டா, பிரச்னையாகிடும்னு, போலீஸ்காரங்களுக்கு பி.ஆர்.எஸ்., மைதானத்திலும், செவிலியர்களுக்கு சுகாதாரத்துறை அலுவலக வளாகத்திலும், விழா நடத்தி, கொடுத்திருக்காங்க,''''அதெல்லாம் சரி, களப்பணியாளர்களுக்கு கொடுத்திருக்காங்க. இரவு - பகல் பார்க்காமல், சாப்பாடு கூட கிடைக்காமல், ஏகப்பட்ட அதிகாரிங்க கடுமையா வேலை பார்த்தாங்களே. அவுங்களுக்கு எதுவுமே செய்யலையே,''''அவுங்களுக்கும் ஏதாச்சும் செய்யணும்னு பேசியிருக்காங்க. தங்கம் வாங்குறதுக்கு 'கிப்ட் வவுச்சர்' கொடுக்கலாம்னு, ஆலோசனை நடந்துக்கிட்டு இருக்காம்,''''தொண்டாமுத்துார் தொகுதியில் மறுபடியும் டோக்கன் கொடுக்குறாங்களாமே,'' என, வம்புக்கு இழுத்தாள் மித்ரா.''ஆமா மித்து, ஒவ்வொரு வீட்டுக்கும், 10 கிலோ காய்கறி தொகுப்பு கொடுக்கப் போறாங்களாம். கூடுதலாக, 12 முட்டை, ஒரு தேங்காய் சேர்த்து, 15 பொருள் கொடுக்கப் போறாங்க. வீடு வீடா டோக்கன் போயிட்டு இருக்கு,''''நாமளும், தொண்டாமுத்துார் தொகுதிக்குள்ள வீட்டை மாத்திடலாம் போலிருக்கே,'' என்ற மித்ரா, ''நிவாரணப் பொருள் வாங்கணும்னு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ,, பெயரை சொல்லி, அன்னுார் ஏரியாவுல கலெக் ஷன் பண்றாங்களாமே,''''யெஸ் மித்து, 'ஜமாப்' அடிக்கிறவர் பெயரைச் சொல்லி, கோவில்பாளையம் ஏரியாவுல வசூல் வேட்டை நடக்குதாம். ஒவ்வொரு மில்லிலும், ஐம்பதாயிரம் ரூபாய் வசூலிச்சிருக்காங்க. மில் ஓனர்கள் புலம்பிட்டு இருக்காங்க,''''ரஜினி சொன்ன மாதிரி, மறுபடியும் ஆட்சிக்கு வர முடியாது போலிருக்கே,'' என்ற மித்ரா, ''கோவைப்புதுாரில் மூன்றெழுத்து இனிசியல் உள்ள கல்லுாரிக்கு பக்கத்துல இருக்கிற நிலத்தை, ஆளுங்கட்சிக்காரங்க வளைச்சுப் போட்டிருக்காங்களாமே,'' என, கேட்டாள்.''மித்து, ஒனக்கு பல விதத்திலும் தகவல் வருது போலிருக்கு. வடக்கு பகுதியிலும், பல நுாறு ஏக்கர் விலை பேசிட்டு இருக்காங்களாம். இன்ஸ்., ஒருத்தரின் சகோதரர், 'ரிஜிஸ்ட்ரார்' ஆபீசில் வேலை பார்க்குறாரு. அவரு எந்த விஷயமா இருந்தாலும் கனகச்சிதமா முடிச்சுக் கொடுத்திடுவாராம். 'கொரோனா' பிரச்னை வர்றதுக்கு முன்னாடி, பக்கத்துல மாநிலத்துல, தோட்டமும் வாங்கியிருக்கிறதாவும் சொல்றாங்க,''''அரசு ஊழியர்களை அழைச்சிட்டு வர, தனியார் ஸ்கூல் பஸ் விட்டுருக்காங்களாமே,'' என, கேட்டாள் மித்ரா.''அதுவா, கலெக்டர் ஆபீசுக்கு வெளியூர்ல இருந்து ஏகப்பட்ட ஊழியர்கள் வேலைக்கு வர்றாங்க. அரசு போக்குவரத்து கழகத்துல ஸ்பெஷல் பஸ் இயக்கறதுக்கு கேட்டுருக்காங்க. வாடகையா, 4,000 ரூபாய் கேட்டிருக்காங்க.அதனால, வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் சொல்லி, பிரைவேட் ஸ்கூல் பஸ்களை 'ஓசி'க்கு வாங்கியிருக்காங்க,'' என்றபடி, கார்ப்பரேஷன் ஆபீசில் இருந்து, ஸ்கூட்டரில் புறப்பட்டாள் சித்ரா.பின்னால் தொற்றிக் கொண்ட மித்ரா, ''அக்கா, கோவில்மேடு ஏரியாவுல 'சரக்கு' வியாபாரம் களைகட்டுச்சாமே,'' என, கேட்டாள்.''ஆமாப்பா, எனக்கும் தகவல் வந்துச்சு. ஆலாந்துறை பக்கத்துல வெள்ளருக்கம்பாளையம், தடாகம் ரோட்டுல, கோவில்மேடு ஏரியாவுல இருக்கற மதுக்கடையில இருந்து, மதுபாட்டில்களை வேற இடத்துல பதுக்கி வச்சு, காலிக்கடைக்கு 'வெல்டிங்' அடிச்சு, 'சீல்' வச்சிருக்காங்க.போலீஸ் அதிகாரிக்கு லஞ்சமா பெரிய தொகை கொடுத்திட்டு, ஞாயித்துக்கிழமை எக்குத்தப்பான ரேட்டுக்கு மது விற்பனை செஞ்சிருக்காங்க. கோடிக்கணக்குல வியாபாரம் நடத்திருக்கு. போலீஸ்காரங்க எட்டிக்கூட பார்க்கலையாம்,''''திருப்பூர்ல இருந்து, 'டிரான்ஸ்பர்' ஆகி வந்திருக்கிற ஒரு இன்ஸ்., ஒவ்வொரு கடைக்கும் 'ரேட்' பிக்ஸ் பண்ணியிருக்காராமே,''''ஆமா மித்து, மதுக்கடையை மூடியிருந்தாலும், மாமூல் வந்தாகணும் சொல்லியிருக்காராம். சேல்ஸ்மேன் புலம்பிட்டு இருக்காங்க,'' என்றபடி, ''ஊராட்சிகளுக்கு புதுசா வந்திருக்க கவுன்சிலர்கள், வாயடைச்சு போயிட்டதா கேள்விப்பட்டேனே,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு மாறினாள் சித்ரா.''ஆமாக்கா, 'கொரோனா' தடுப்பு பணிக்காக, ஒவ்வொரு ஊராட்சிக்கும் வாரத்துக்கு, 100 மூட்டை பிளீச்சிங் பவுடர் வாங்குறாங்களாம். மூட்டைக்கு ஆயிரம் ரூபாய் அதிகமா விலை நிர்ணயம் செஞ்சு, தொகை எடுக்குறாங்களாம். 'கொரோனா' நிதியை கொள்ளையடிக்கிறாங்கன்னு, புலம்பிட்டு இருக்காங்க. விஷயம் தெரிஞ்ச கவுன்சிலர்கள் கண்டுக்கறதில்லையாம்,''''ஊராட்சியிலேயே இப்படின்னா, கார்ப்பரேஷன்ல எக்குத்தப்பா நடந்திருக்குமே,''''கார்ப்பரேஷன்ல எப்பவுமே கோடிக்கணக்குல டீல் பண்ணுவாங்க. மொத்தம், 100 வார்டு இருக்கறதுனால, 200 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர் வாங்கியிருக்காங்களாம். யாராச்சும், தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேள்வி கேட்டால்தான், என்னென்ன வாங்குனாங்க, எவ்ளோ விலைக்கு வாங்குனாங்கன்னு, உண்மை வெளிச்சத்துக்கு வரும்,'' என்ற படி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X