பொது செய்தி

தமிழ்நாடு

20 ஆயிரம் பேருக்கு நிவாரணம்: அமைச்சர் வேலுமணி வழங்கினார்

Added : மே 12, 2020
Share
Advertisement
 20 ஆயிரம் பேருக்கு நிவாரணம்: அமைச்சர் வேலுமணி வழங்கினார்

கோவை:'கொரோனா' தடுப்பு பணியில் ஈடுபட்ட, துாய்மை பணியாளர்கள், செவிலியர், போலீசார் உட்பட, 20 ஆயிரத்து, 450 பேருக்கு, அமைச்சர் வேலுமணி நேற்று நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.கோவை மாவட்டத்தில், 'கொரோனா' வைரஸ் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு, அமைச்சர் வேலுமணி சார்பில், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில், நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.டாக்டர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் - 1,000 பேருக்கு முழு உடல் பாதுகாப்பு கவச உடை, 7,500 துாய்மை பணியாளர்கள், செவிலியர்கள், துாய்மை காவலர், டேங்க் ஆபரேட்டர், மஸ்துார் மற்றும் போலீசார் என, 20 ஆயிரத்து, 450 பேருக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டி வழங்கப்பட்டது.விழாவில், அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''கோவையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், எட்டு லட்சம் குடும்பத்துக்கு, நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறோம். 'அம்மா' உணவகத்தில் மூன்று வேளையும், இலவச உணவு கொடுக்கிறோம். நல்லறம் அறக்கட்டளை சார்பில், 20 லட்சம் பேருக்கு உணவு வழங்கியிருக்கிறோம். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 3 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக நோய் தொற்று இல்லாமல் தடுத்திருக்கிறோம். இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X