சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவர் மீது தாக்குதல் சம்பவம்: 'மாஜி' கவுன்சிலருக்கு 'வலை'

Added : மே 12, 2020
Share
Advertisement

கருமத்தம்பட்டி:முன் விரோதத்தால், மெக்கானிக் உள்ளிட்ட இருவரை தாக்கிய, மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையத்தை சேர்ந்தவர்கள் ஜெகநாதன்,39, பொன்னுசாமி, 38. இவர்கள் இருவரையும் நிலத்தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக, கடந்த, 6ம் தேதி கூட்டாளிகளுடன் சேர்ந்து, அ.தி.மு.க., வை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் நந்தகோபால் தாக்கியுள்ளார்.கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடவடிக்கை எடுக்க தாமதம் செய்ததால், ஊர் மக்கள் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.போலீசார் இவ்வழக்கில் தொடர்புடைய செகுடந்தாளி ரோட்டை சேர்ந்த பாண்டியராஜன் மகன் சோமநாதன், 29, திருவண்ணாமலையை சேர்ந்த முருகன் மகன் அன்பு, 29, தருமபுரியை சேர்ந்த பிரகாசம் மகன் அமரேசன்,26 ஆகிய மூவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நந்தகோபாலை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X