பொது செய்தி

தமிழ்நாடு

கே.எம்.சி.எச்., சார்பில் நிவாரணப்பொருட்கள்

Added : மே 12, 2020
Share
Advertisement
 கே.எம்.சி.எச்., சார்பில்  நிவாரணப்பொருட்கள்

கோவை:கே.எம்.சி.எச்., சார்பில், கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, சரவணம்பட்டியில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.சரவணம்பட்டி பகுதிகளில் உள்ள, ஏழை, எளியோருக்கு, 15 ஆயிரம் கிலோ அரிசி நிவாரணமாக வழங்கப்பட்டது. கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி மற்றும் கே.எம்.சி.எச்., மேலாளர் நாராயணன் வழங்கினர். நாராயணன் கூறுகையில், ''கொரோனா சிகிச்சைக்காக, காளப்பட்டி ரோட்டில், கே.எம்.சி.எச்., சார்பில் சிறப்பு சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது. பொது நிவாரண நிதிக்காக, ரூ.1 கோடியே, 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், சரவணம்பட்டியில் உள்ள, மக்களுக்கு, உதவும் வகையில், நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X