சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமுகை வனத்தில் பெண் யானை பலி

Added : மே 12, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:சிறுமுகை வனப்பகுதியில் அழுகிய நிலையில், பெண் யானை இறந்து கிடந்தது.சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை பீட்டில், வனவர் மகேஷ்குமார், வனக்காப்பாளர் கண்ணன், வனக்காவலர் ராஜசேகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, வரப்பள்ளம் வனப்பகுதியில், இறந்து அழுகிய நிலையில், ஒரு பெண் யானை கிடப்பதை பார்த்தனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சிறுமுகை வனத்துறை கால்நடை டாக்டர் சுகுமார் தலைமையில், மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். யானையின் முக்கிய உறுப்புகளை ஆய்வுக்கு எடுத்தனர்.யானை எதனால் இறந்தது என்ற விபரம், பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X