பொது செய்தி

தமிழ்நாடு

'கோவை, திருப்பூர் நிறுவனங்கள் சாதிக்கும்'

Added : மே 12, 2020
Share
Advertisement

திருப்பூர : ''கோவை, திருப்பூர் நிறுவனங்கள், சாதிக்கும். அதிக ஆர்டர்களை இவை பெற துவங்கியிருப்பதே, இதற்கு சாட்சி,'' என, இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவன நிர்வாகி தெரிவித்தார்.

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமான, ஐ.சி.ஏ.ஐ.,யின், தென்னிந்திய துணைத் தலைவர், ஜலபதி கூறியதாவது:கொரோனா பரவலால், மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள், ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து, செயல்படத் துவங்கி உள்ளன. நடைமுறை மூலதனம், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரச்னைகளை, தொழில் நிறுவனங்கள் முதல் கட்டமாக, சந்தித்து வருகின்றன.இந்திய நிறுவனங்கள், தற்போதைய வர்த்தக சவாலை எதிர்கொள்ளும் திறன் பெற்றவையாக இருக்கின்றன.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுளுடன் ஒப்பிடுகையில், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், கொரோனா பரவல் என்பது மிகக்குறைவே. உலக நாடுகள், நம் அரசின் நிர்வாகத் திறனைக் கண்டு வியக்கின்றன. இதேபோல், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார, வர்த்தக பாதிப்புகளில் இருந்து, நம் நாட்டு நிறுவனங்கள் நிச்சயம் மீண்டெழும்.கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்கள், புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பல நிறு வனங்கள், அதிக ஆர்டர்களைப் பெறத் துவங்கியுள்ளன.ஊரடங்கின்போது, ஆடிட்டர் பணியும் முடங்கியிருந்தது. நிறுவனங்களின் செயல்பாடு தீவிரமாகும்போது, ஆடிட்டர்களின் பணியும் வேகமெடுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X