தமிழ்நாடு

திருப்பூரில் இயல்பு நிலை திரும்பியது!

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020
Share
Advertisement
 திருப்பூரில் இயல்பு நிலை திரும்பியது!

திருப்பூர்:ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு நேற்று கடைகள் திறக்கப்பட்டன. பெரும்பாலானோர் எலக்ட்ரிக் மற்றும் பாத்திர பழுது நீக்கும் கடைகளில் திரண்டனர்.கொரோனா ஊரடங்கு தளர்வில், நேற்று முதல் பல்வேறு வகையான கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டன.
கடந்த வாரமே சில பகுதிகளில் மொபைல் போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடைகள் ஒரு சில பகுதிகளில் திறக்கப்பட்டிருந்தன. நேற்று இவை முழு அளவில் திறக்கப்பட்டிருந்தன. நேற்று முதல் சிறியளவிலான நகை மற்றும் துணிக்கடைகள் திறக்கப்பட்டன.பாத்திர கடைகள், எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் கடைகளும் திறக்கப்பட்டன.
கடந்த ஒன்றரை மாதமாக மக்கள் வீட்டில் முடங்கியிருந்த காரணத்தால் அதிகளவில் மின் விசிறி பயன்படுத்தப்பட்டது. அதே போல், மிக்ஸி, கிரைண்டர், குக்கர் உள்ளிட்டவையும் வழக்கத்தை விட அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.இவை பல வீடுகளில் பழுதாகி, சரி செய்ய கடையில்லாமல் கிடந்தன. வீடுகளில் அத்தியாவசிய பொருட்கள் என்பதால் இவற்றை கடைகள் திறந்த உடனே, சரி செய்ய பலரும் கொண்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X