சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டை கொலையில் சென்னை போலீஸ் கைது

Added : மே 12, 2020
Share
Advertisement

திருநெல்வேலி : நாசரேத் இரட்டை கொலையில், சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் உட்பட, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

துாத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உடையார்குளத்தைச் சேர்ந்தவர் பலவேசம், 60. வீட்டுப் பத்திரத்தை கொடுத்து, சண்முகசுந்தரம் என்பவரிடம், 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.கடனை செலுத்தி, பத்திரத்தை கேட்டபோது சண்முகசுந்தரம் தர மறுத்தார். பலவேசம் புகாரில், போலீசார் இருவரை கைது செய்தனர். ஆத்திரமுற்ற சண்முகசுந்தரம் தரப்பினர், பலவேசம் வீட்டிற்கு சென்று, அவரையும், மருமகன் தங்கராஜ், 26, என்பவரையும் வெட்டிக் கொலை செய்தனர்.

இதில், பொன்ராஜ், 33, உட்பட ஒன்பது ஆண்களை, போலீசார் கைது செய்தனர். பொன்ராஜ், சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார்.3 பேர் கைதுதிருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த, ஹோமியோபதி டாக்டர் திருப்பதி லிங்கராஜ், 34. கடந்த, 9ம் தேதி இரவு, வீட்டுக்கு பைக்கில் செல்லும் வழியில், வெட்டி கொலை செய்யப்பட்டார்.போலீசார் விசாரணை நடத்தி, பக்கத்து வீட்டில் வசிக்கும், வக்கீல் முத்துகிருஷ்ணன், 30, உட்பட மூன்று ஆண்களை கைது செய்தனர். வீட்டு முன்புள்ள நடைபாதை தொடர்பாக, வக்கீலுடன் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்துள்ளது. மேலும், இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X