சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கை, கால்களை கட்டி சிறுமி எரித்து கொலை

Added : மே 12, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே, சிறுமியின் கை, கால்களை கட்டிப் போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த, அ.தி.மு.க., பிரமுகர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால், 41; இவருக்கு, ஜெயராஜ், 16, என்ற மகன், ஜெயஸ்ரீ, 15, ராஜேஸ்வரி, 13, ஆகிய மகள்கள் உள்ளனர். ஜெயஸ்ரீ, அங்குள்ள அரசுப் பள்ளியில், 10ம் வகுப்பு
 கை, கால்களை கட்டி சிறுமி எரித்து கொலை

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே, சிறுமியின் கை, கால்களை கட்டிப் போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த, அ.தி.மு.க., பிரமுகர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால், 41; இவருக்கு, ஜெயராஜ், 16, என்ற மகன், ஜெயஸ்ரீ, 15, ராஜேஸ்வரி, 13, ஆகிய மகள்கள் உள்ளனர். ஜெயஸ்ரீ, அங்குள்ள அரசுப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.7 ஆண்டு பகைஅதே பகுதியைச் சேர்ந்தவர் அருவி. அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர். இவரது கணவர் முருகன். இவரது தங்கையை, ஜெயபால் தம்பி குமார், ஏழு ஆண்டுகளுக்கு முன் அவமானப்படுத்தியதாக முன்விரோதம் இருந்தது.அதோடு, தன் நிலத்தின் வழியை பயன்படுத்தக்கூடாது என, ஜெயபாலுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இந்நிலையில், ஜெயபால் வைத்துள்ள பெட்டிக்கடையில், கடந்த, 9ம் தேதி, அவரது மகன் ஜெயராஜ் இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சிலர், பீடி கேட்டு தகராறு செய்து, ஜெயராஜை தாக்கினர்.மறுநாள் காலை, ஜெயபால், மகன் ஜெயராஜுடன் திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றார். வீட்டின் முன்புறம், ஜெயஸ்ரீ துாங்கிக் கொண்டிருந்தார். பின்புறம், ஜெயபால் மனைவி மற்றும் மற்றொரு மகள் இருந்தனர். வாக்குமூலம்அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், சிறுமி ஜெயஸ்ரீயின் வாயில் துணியை திணித்து, கை, கால்களை கட்டிப் போட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஜெயஸ்ரீயிடம் மாஜிஸ்திரேட் விசாரித்தார்.

முன்னாள் கவுன்சிலர் கணவர் உட்பட, சிலர் தன் மீது தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில், ஜெயஸ்ரீ நேற்று காலை, 8:30 மணிக்கு இறந்தார். இதையடுத்து, கொலை வழக்கு பதியப்பட்டு, முருகன், 51; அவரது உறவினரான, சிறுமதுரை, அ.தி.மு.க., கிளைச் செயலர் கலியபெருமாள், 60, ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், தங்கையை அவமானப்படுத்தியது மற்றும் நிலத்தின் பாதையை பயன்படுத்திய முன்விரோதத்தில் கொலை செய்தது தெரிந்தது.

மேலும், ஜெயராஜிடம் தகராறு செய்தவர்கள் மீது கொலை பழி விழுந்து விடும் என்பதற்காக, திட்டமிட்டு கொலை செய்ததும் தெரிந்தது. எம்.எல்.ஏ., ஆறுதல்திருக்கோவிலுார் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடி, ஜெயஸ்ரீ உடலுக்கு அஞ்சலி செலுத்தி, பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, அப்பகுதி மக்கள், சாலையில் மறியலில் ஈடுபட்டு, 'சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.'நிச்சயம் கடுமையான தண்டனை வழங்கப்படும்' என, உறுதி அளித்த பொன்முடி, டி.ஸ்.பி.,யிடம் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தினார்.

ரூ.5 லட்சம் நிவாரணம் சிறுமியின் குடும்பத்திற்கு, முதல்வர், இ.பி.எஸ்., இரங்கல் தெரிவித்துள்ளார். இச்செயலை வன்மையாக கண்டித்துள்ளதுடன், இதில் ஈடுபட்டோர் மீது, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தெரிவித்து உள்ளார்.மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு, பொது நிவாரண நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வழங்கவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

துாக்கு தண்டனைவிஜயகாந்த் ஆவேசம்தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் அறிக்கை:தந்தையிடம் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, சிறுமியை, பெட்ரோல் ஊற்றி எரித்தது, எந்த வகையிலும் நியாயம் இல்லை. எனவே, இனிவரும் காலங்களில், இதுபோன்ற செயல்கள் எங்கும் நடக்காத வண்ணம், இச்சம்பவத்தில் ஈடுபட்ட மனித மிருகங்களுக்கு, துாக்கு தண்டனை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar - Doha,கத்தார்
13-மே-202019:19:02 IST Report Abuse
kumar first pollachi case la ellaraiyum thookkula podungada.
Rate this:
Cancel
munusamyganesan - CHENNAI,இந்தியா
13-மே-202018:36:25 IST Report Abuse
munusamyganesan ஹாய், குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்கவேண்டும்.தப்பிக்க விடக்கூடாது. பெண் குழந்தை அநியாயமாக கொன்று விட்டார்கள். மனம் மிகவும் வேதனை படுகிறது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லயே அவர் இருந்தால் நிச்சயம் தண்டிப்பார்.சத்தியம் சாகாது.
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
13-மே-202013:49:38 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI தருமபுரி பஸ் எரிப்புபோல இதுவும் ஆக கூடாது இரண்டுமே ஒரே கட்சிதான் அதுக்காக சொல்றேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X