சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் கலெக்டர் உத்தரவின்றி திறக்கப்பட்ட கடைகள் மூடல்

Added : மே 12, 2020
Share
Advertisement

திண்டிவனம்: திண்டிவனத்தில், கலெக்டர் உத்தரவின்றி திறக்கப்பட்ட கடைகள், போலீசார் விடுத்த எச்சரிக்கைக்கு பிறகு மூடப்பட்டது.திண்டிவனத்தில், கொரோனோ தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், தொடர்ந்து 4 நாட்கள் கடைகள் திறப்பதும், அதன் பின் தொடர்ந்து மூன்று நாட்கள் கடைகளை அடைக்கும் முடிவை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.அதன்படி, திண்டிவனத்தில் கடந்த 10ம் தேதியிலிருந்து காய்கறி, மளிகைக் கடைகள், மருந்து மற்றும் பால் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. வரும் 13ம் தேதி வரை கடைகள் திறந்திருக்கும். இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை தளர்த்தி, நேற்று 11ம் தேதி முதல் டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் என 34 வகையான கடைகளை திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில், திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், திண்டிவனம் நகரம் கொரோனா தொற்றுக்குட்பட்ட பகுதி என்பதால், கடைகள் திறப்பு குறித்து தமிழக அரசு அறிவிக்கும் பொதுவான அறிவிப்பு நமக்கு பொருந்தாது. கலெக்டரிடமிருந்து வரும் முறையான அறிவிப்பிற்கு பின்னரே 34 வகையான கடைகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.திண்டிவனத்தில் பால், காய்கறி, மளிகை, மருந்து கடைகள் மட்டுமே திறக்கப்படும். இதை தவிர வேறு எந்த கடையும் திறக்கப்படமாட்டாது என்று அறிவித்திருந்தது. ஆனால் திண்டிவனத்தில் நேற்று பல இடங்களில், ஏற்கனவே திறந்திருந்த கடைகள் மட்டுமல்லாமல், புதியதாக எலக்ட்ரிக் கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது.உடனடியாக போலீசார் மைக் மூலம், கலெக்டர் உத்தரவு வரும் வரை திண்டிவனத்தில் மற்ற கடைகளை திறக்க கூடாது, உடனே கடைகளை மூட வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து, திண்டிவனத்தில் நேற்று காய்கறி, மளிகை மற்றும் மருந்து, பால் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. மற்ற கடைகள் மூடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X