கள்ளக்குறிச்சியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

Added : மே 12, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் உள்ள மளிகைக் கடைகளுக்கு பெரிய நிறுவனங்களின் சப்ளை நிறுத்தப்பட்டதால் தரமான பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கள்ளக்குறிச்சியில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, நேர கட்டுப்பாட்டுடன் தினமும் ஏராளமான பொதுமக்கள் உரிய சமூக இடைவெளியுடன் கடைகளுக்கு சென்று காய்கறிகள், மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றனர்.ஆனால், ஊரடங்கு தொடங்கி 45 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், ஒரு சில பெரிய கடைகளைத் தவிர மற்ற மளிகைக் கடைகளில் பொருட்கள் அனைத்தும் தீர்ந்தன. தமிழக அரசு சார்பில் பல்வேறு சலுகைகளை வழங்கி ஊரடங்கினை தளர்த்திய போதும், டீத்துாள், காபித்துாள், சோப்பு உள்ளிட்டவைகளை சப்ளை செய்யும் பெரிய நிறுவனங்கள் தங்களது சப்ளையை முற்றிலுமாக நிறுத்தியிருப்பது பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.இதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் கடைக்காரர்கள் தரம் குறைந்த பல்வேறு டூப்ளிகேட் பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றனர். அதனை எம்.ஆர்.பி., ரேட்டுக்கு மேல் பன்மடங்கு விலையை ஏற்றி, விற்பனை செய்து வருகின்றனர்.எனவே, ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் முறையாக கிடைக்கிறதா என்பதனை உறுதிப்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X