சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விசாரணை கைதிக்கு கொரோனா திருநள்ளாறு போலீஸ் ஸ்டேஷன் மூடல்

Added : மே 12, 2020
Share
Advertisement

காரைக்கால் : காரைக்காலில், விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, திருநள்ளாறு போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது.

புதுச்சேரி, யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, காரைக்கால் மாவட்டம், கொரோனா தொற்று இன்றி பச்சை மண்டலமாக இருந்தது.இந்நிலையில், முன்விரோதத்தில் ஒர்க் ஷாப்பிற்கு தீ வைத்த வழக்கில், சுரக்குடியைச் சேர்ந்த, 35 வயது டிரைவரை, திருநள்ளாறு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.அவரை, சிறையில் அடைக்க, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும், அவரது குடும்பத்தினர், திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட, 29 போலீசார், தனிமைப்படுத்தப்பட்டனர். போலீசாருக்கு உமிழ் நீர் பரிசோதனை மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.திருநள்ளாறு போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டு, நேற்று முதல் சனீஸ்வரர் கோவில் அருகில் உள்ள சன்னிதி தெருவுக்கு, தற்காலிகமாக மாற்றப்பட்டது. போலீஸ் ஸ்டேஷனை கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபர், ஊரடங்கு நேரத்தில், மீன் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனால், மேலும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X