கொய்மலர் தோட்டங்கள் அழிக்கும் விவசாயிகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொய்மலர் தோட்டங்கள் அழிக்கும் விவசாயிகள்

Added : மே 12, 2020
Share

ஓசூர் : ஓசூர் சுற்று வட்டாரத்தில், சாகுபடி செய்த கொய்மலர்களை, சந்தையில் விற்க முடியாத நிலையில், டிராக்டர் மூலம் விவசாயிகள் அழித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்று வட்டாரத்தில், 2,000 ஏக்கரில், ரோஜா, ஜெர்புரா, கார்னேசன், கிரசாந்திமம் போன்ற கொய்மலர்கள், பசுமை குடில்களில் சாகுபடி செய்யப்படுகின்றன.சாகுபடி செய்த கொய்மலர்களை, ஊரடங்கால் சந்தைக்கு அனுப்ப முடியவில்லை. குளிர்பதன கிடங்கில் வைத்திருந்த கொய்மலர்களும் அழுகி விட்டன.ஊரடங்கு அறிவித்து, நேற்றுடன், 48 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இதுவரை, உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு மலர்களை அனுப்ப முடியாமல், 350 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுஉள்ளதாக, விவசாயிகள் கூறுகின்றனர்.

ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர், பாலசிவப்பிரசாத் கூறியதாவது:கொய்மலர் செடிகளை பாதுகாக்க, நாளொன்றுக்கு ஏக்கருக்கு, 7,500 ரூபாய் வரை செலவாகிறது. வருமானமின்றி செடிகளை பராமரிப்பது சிரமமாக உள்ளது. அதனால், விவசாயிகள், கொய்மலர் தோட்டங்களை, டிராக்டரை ஓட்டி அழித்து வருகின்றனர். ஊரடங்கை விலக்கினாலும், மலர்களை சாகுபடி செய்து, மீண்டும் புத்துயிர் ஊட்ட, குறைந்தபட்சம் ஆறு மாதங்களாகும். வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியை, 4 சதவீதமாக குறைப்பதுடன், விவசாய நகைக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X