பொது செய்தி

தமிழ்நாடு

இயல்பு நிலைக்குத் திரும்பியது திருக்கோவிலூர்

Added : மே 12, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்: ஊரடங்கு உத்தரவு தளர்வால் இயல்பு நிலைக்கு திரும்பியது திருக்கோவிலுார் நகரம்.கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி மாலை ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியானது முதல் திருக்கோவிலுார் நகரில் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இவையும் மதியம் வரை மட்டுமே இயங்கியது.அந்த நேரத்தில் கூட போலீசாரின் கடுமையான கெடுபிடி காரணமாக கிராமத்திலிருந்து மக்கள் பொருட்களை வாங்க நகரத்திற்கு வருவதை தவிர்த்தனர்.இதனால் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று அரசின் அறிவிப்புக்கு ஏற்ப சலுான் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் 47 நாட்களுக்கு பிறகு திருக்கோவிலுார் கடைவீதியில் அதிக மக்களைக் காண முடிந்தது. பஸ் போக்குவரத்து இல்லையென்றாலும் கார், பைக்குகளில் கிராமப் பகுதியில் இருந்து மக்கள் பொருட்களை வாங்க குவிந்ததால் நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X