ஊரடங்கிலிருந்து கடைகளுக்கு அனுமதியளித்தும்அகற்றப்படாத சாலை தடுப்புகளால் மக்கள் அவதி| Dinamalar

ஊரடங்கிலிருந்து கடைகளுக்கு அனுமதியளித்தும்அகற்றப்படாத சாலை தடுப்புகளால் மக்கள் அவதி

Added : மே 12, 2020
Share

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கொரோனா ஊரடங்கிலிருந்து தளர்வு ஏற்படுத்தி பல்வேறு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சாலைகளில் அமைக்கப்பட்ட தடைகள் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சியில் ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்தை குறைக்கும் வகையில் முக்கிய சாலைகள், தெருக்களில் தடுப்பு கட்டைகள் மூலம் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டது.இந்நிலையில், தமிழக அரசு நேற்று முதல் ஊரடங்கிற்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு 34 வகையான கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இதனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக முற்றிலுமாக முடங்கிப் போயிருந்த கள்ளக்குறிச்சி நகரம் தற்போது முழுவீச்சில் இயங்க துவங்கியது. ஆனால் முக்கிய சாலைகள், தெருக்களின் சந்திப்புகள் அனைத்தும் தடுப்புகட்டைகளால் அடைபட்ட நிலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.அத்துடன் நகரப்பகுதியில் கொரோனா தொற்று யாருக்கும் இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருந்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடைகளையும் முற்றிலும் அகற்றி போக்குவரத்து சீரமைக்க மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X