சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது

Added : மே 12, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; திருநாவலுாரில் வீட்டில் சாராயம் காய்ச்சிய இருவரை போலீசார் கைது செய்தனர்.திருநாவலுார் போலீசாருக்கு, நேற்று முன்தினம் வடமாம்பாக்கம், கிளியூர் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்த போது, வடமாம்பாக்கம் கிராமத்தில் ஏழுமலை, 47; என்பவர் வீட்டில், 110 லிட்டர் சாராயம், 600 லிட்டர் ஊறலில் இருந்த சாராயத்தையும் அழித்தனர்.அதே போல், கிளியூர் கிராமத்தில் சேட்டு, 33; என்பவர் வீட்டில் இருந்த 50 லிட்டர் சாராயம் மற்றும் 200 லிட்டர் ஊறலையும் அழித்தனர். இந்த வழக்குகளில், ஏழுமலை, சேட்டு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மற்றொரு வழக்குதிருநாவலுார் போலீசார், நத்தாமூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த, சங்கர் மகன் சதீஷ், 25; மாயக்கண்ணன்,40; ஆகியோரை கைது செய்து, 200 லிட்டர் சாராயம் மற்றும் 110 லிட்டர் ஊறலையும் அழித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X