இந்தியா

முதல்வர் நிவாரண நிதிக்கு கூட்டுறவு சங்கங்கள் நன்கொடை

Added : மே 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கூட்டுறவு சங்கங்கள் சார்பில் முதல்வரின் கோவிட் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கப்பட்டது.புதுச்சேரி பொது அரசு ஊழியர் கடன் சங்கம் சார்பில் சேமநல நிதியில் இருந்து முதல்வர் கோவிட் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் காசோலையை, முதல்வர் நாராயணசாமியிடம், அமைச்சர் கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி., முன்னிலையில் சங்க தலைவர் தமிழ்ஒளி வழங்கினார்.நிகழ்ச்சியில் குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன், சங்க இயக்குனர்கள் மணி, தரணி சிங், துளசிங்கம், கணேஷ், செல்வகுமார், ராஜசேகர், சங்கர், கோவிந்தசாமி மற்றும் செயலர் கோவிந்த நாயுடு கலந்து கொண்டனர்.இதேபோல், புதுச்சேரி கூட்டுறவு கட்டட மையம் சார்பில் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளமாக ரூ. ஒரு லட்சம், கரிக்கலாம்பாக்கம் குமரேஸ்வரன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் சேமநல நிதியில் ரூ.50 ஆயிரம், ஒரு நாள் சம்பளமாக ரூ.9,100யை முதல்வரின் நிவாரண நிதிக்கு மைய நிர்வாகி இருசப்பன், மேலாண் இயக்குனர் கோவிந்தநாயுடு ஆகியோர் முதல்வரிடம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X