2 லட்சம் பேருக்கு உணவு; ஸ்டாலின் பெருமிதம்| Stalin provides food for over 2 lakh people | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

2 லட்சம் பேருக்கு உணவு; ஸ்டாலின் பெருமிதம்

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (189)
Share
dmk, MK Stalin, Stalin, tamil nadu news, tn news, dinamalar news, DMK Chief MK Stalin,
திமுக,ஸ்டாலின்

சென்னை : 'தமிழகம் முழுவதும், ஒருங்கிணைவோம் வா திட்டத்தின் கீழ், தினமும், இரண்டு லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்: 'ஒன்றிணைவோம் வா' உதவும் எண்ணுக்கு வந்த அழைப்புகள் வாயிலாக, தமிழகத்தில், தினமும், 2 லட்சம் பேருக்கு உணவு வழங்கும் வகையில், 22 இடங்களில், சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


latest tamil newsசமூக அக்கறையுள்ள தன்னார்வலர்கள் பலரும் இணைந்து, உதவி செய்து வருகின்றனர். உதவிகள் தேவைப்பட்ட, அ.தி.மு.க.,வினரும், உதவி எண்ணில் பேசியுள்ளனர். அவர்களின் முகவரியை தேடிச் சென்று, தி.மு.க.,வினர் உதவி அளித்தனர். உதவியை பெற்று நன்றியையும், வாழ்த்துக்களையும், அவர்கள் கூறியுள்ளனர். மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும், உதவிகள் பெற்று பாராட்டியுள்ளனர். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X