புதிய சிந்தனை... புதிய பாதை! | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய சிந்தனை... புதிய பாதை!

Added : மே 12, 2020
Share

திருப்பூர்:மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்திற்கு இணங்க, 'புதிய பாதை மற்றும் சிந்தனை'யுடன் களமிறங்க, பின்னலாடைத்துறையினர் களமிறங்கத் தயாராக உள்ளனர்.ஊரடங்கால், நாடு முழுதும் முடங்கியிருந்த, பின்னலாடை உட்பட ஜவுளித்தொழிற்சாலைகள், மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன.தமிழக தொழிலாளர் ஏராளமானோர் சொந்த ஊர் சென்றுவிட்டனர்.

ரயில் இயக்காததால், வடமாநில தொழிலாளர் திருப்பூரிலேயே தங்கியுள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள், அந்த தொழிலாளர்களை விடுதியில் தங்கவைத்து, பாதுகாத்துள்ளன.ஊரடங்கு தளர்வால், கடந்த 6ம் தேதி முதல், நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன. இச்சூழலில், வடமாநில தொழிலாளர் பெரும்பாலானோர், ரயில், சிறப்பு வாகனங்களில், சொந்த மாநிலம் நோக்கி செல்ல துவங்கியுள்ளனர்.
திருப்பூரில் தங்கியுள்ள தமிழக தொழிலாளர், விடுதிகளில் உள்ள வடமாநில தொழிலாளர்களை கொண்டு, நிறுவனங்கள் ஆடை தயாரிப்பை தொடர்கின்றன. 50 சதவீத தொழிலாளருடன் இயங்க அனுமதி அளித்துள்ளாலும், ஆர்டரும் இல்லை.தொழிலாளர்

தேவை அதிகரிக்கும்ஏ.இ.பி.சி., நிரந்தர அழைப்பாளர் குமார் துரைசாமி கூறியதாவது:ஒரு குழப்பமான வர்த்தக சூழல்தான் தற்போது நிலவுகிறது. பாதியில் விடப்பட்ட ஆடை தயாரிப்பை முழுமை செய்தல், சேம்பிள் ஆடை தயாரிப்பு, முக கவசம் தயாரிப்பு என, ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு நிலைகளில் உற்பத்தி பணிகளை மேற்கொண்டுள்ளன. அரசு விதிமுறை மற்றும் ஆர்டர் இல்லாததால், நிறுவனங்களால், அனைத்து தொழிலாளருக்கும் வேலை வழங்குவது இயலாததாக உள்ளது.
அனைவருக்கும் வழங்க, ஓரிரு வாரங்கள் காத்திருக்கவேண்டும். அதனாலேயே, வெளிமாநில தொழிலாளர் பலர் சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர், புரோக்கர்களால் அழைத்துவரப்பட்டு, கைவிடப்பட்டவர்கள். போதிய வசதிகள் செய்துகொடுத்துள்ளதால், விடுதிகளில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்கள், பணிபுரியவே விரும்புகின்றனர். தற்போதைய சூழலில், அவர்கள் சொந்த ஊர் செல்வதால், தொழில் துறைக்கு பாதிப்பு ஏற்படாது. வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து அதிகளவு ஆர்டர்கள் வரும்போது, தொழிலாளர் தேவை அதிகரிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
'யாரையும் எதிர்பார்க்கவில்லை'நேற்றுமுன்தினம், தொழில்துறையினருடன் நடந்த இணையவழி கலந்துரையாடலில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:புதிய பாதை மற்றும் சிந்தனையுடன் ஜவுளித்துறையினர் களமிறங்க வேண்டிய தருணமிது. மீண்டும் தகவமைத்து கொள்வதோடு, தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள நேரமும் இதுவே.
யாரையும் எதிர்பார்ப்பதில்லை என்பதற்கு உதாரணமாக, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பு பாதுகாப்புக் கவச உடைகள் தயாரிப்பதற்கு, ஜவுளித்துறையினர் காட்டிய ஆர்வத்தைக் கூறலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.மீண்டெழுவது உறுதி...பின்னலாடைத்துறையினர் கூறியதாவது:மத்திய அரசு, பின்னலாடை உட்பட ஜவுளித்துறையினர் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இதைத்தான், மத்திய அமைச்சரின் கருத்துகள் சுட்டி காட்டுகின்றன. மூலப்பொருட்கள் உட்பட பிரச்னைகள் இருந்தபோதும், முகக்கவசம், பாதுகாப்பு கவச உடை போன்றவை, திருப்பூரில் தயாராகி வருகின்றன.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முடங்கியுள்ள இத்தருணத்தில், ஆர்டர்கள் பெறுவதில் உள்ள சிரமங்கள், ஏற்கனவே கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகை பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தாண்டி, பின்னலாடைத்துறை மீள வேண்டியுள்ளது.
இது கடினம் என்றபோதிலும், வங்கிகள் மற்றும் அரசின் ஒத்துழைப்பு மூலம், இதைக் கடந்து சாதிக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.நாங்கள் மட்டுமல்ல; லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், பின்னலாடைத்துறையின் இயக்கத்தை சார்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து, எங்கள் பணியை தொடர்வோம். புதிய பாதை மற்றும் சிந்தனையுடன் களமிறங்க தயாராகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.'எதிர்பார்ப்பதில்லை'

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X