பொது செய்தி

தமிழ்நாடு

பணியில் இணையும் ஒப்பந்த செவிலியர்கள் 80 பேருக்கு இட ஒதுக்கீடு

Added : மே 12, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு பணிக்காக, 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள், பணியில் இணைந்து வருகின்றனர்.தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரம் மற்றும் துாய்மை பணியாளர்கள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க, கூடுதல் செவிலியர்கள் தேவைப்பட்ட நிலையில், 2,570 செவிலியர்களை, 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த அரசு உத்தரவிட்டது. அவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்திற்கு, 80 செவிலியர்களுக்கு, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அவர்கள், தற்போது, பணியில் இணைந்து வருகின்றனர்.மருத்துவப் பணிகள் துறையினர் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், பெரிச்சிபாளையம் தலைமை அரசு மருத்துவமனைக்கு, 40 பேர்; தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு, 20 பேர்; உடுமலை அரச மருத்துவமனைக்கு, 20 பேர் என, மொத்தம், 80 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்களுக்கு, 14 ஆயிரம் ரூபாய், சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X