வட மாநில தொழிலாளரால் போலீசாருக்கு தலைவலி

Added : மே 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வட மாநில தொழிலாளரால் போலீசாருக்கு தலைவலி

பல்லடம்:சொந்த ஊர் செல்வதாக கூறி, வட மாநில தொழிலாளர்கள் ரோட்டுக்கு வருவது, போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வரும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்ல முடியாமல், வேலை பார்க்கும் இடத்திலேயே தங்கி யுள்ளனர். அவர்களை ஊருக்கு அனுப்ப, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இருப்பினும், தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் செல்வதாக கூறி, ரோட்டுக்கு வருவது அதிகரித்து வருகிறது. பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்களை சார்ந்து, வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். சொந்த ஊருக்கு செல்வதாக கூறி, கூட்டம் கூட்டமாக ரோட்டுக்கு வருகின்றனர். போலீசாரும் அவர்களை தடுத்து நிறுத்த வழியில்லாமல் திணறி வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'ஆன்லைனில் பதிவு செய்த உடனே ஊருக்கு செல்ல வேண்டும் என, துணிமணிகளுடன் தொழிலாளர்கள் புறப்படுகின்றனர். விரைவில் ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவுதான், சொன்னாலும் அடிக்கடி இதுபோல், கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-மே-202012:28:00 IST Report Abuse
Ram pollachi சொன்னபடி கேளு மக்கர் பன்னாதே. வீட்டுக் கவலை அதிகமாகி விட்டது அதான் ரோட்டுக்கு வந்துவிட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X