பொது செய்தி

தமிழ்நாடு

காப்பீடு நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

Added : மே 12, 2020
Share
Advertisement

சேலம்: அனைத்திந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவையின், சேலம் மாவட்ட தலைவர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் ராமனிடம் மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 15 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுனர்கள் உள்ளனர். அவர்களில், சேலம் மாவட்டத்தில், 39 ஆயிரம் பேர் உள்ளனர். ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டுமே, நல வாரிய உறுப்பினர்களாக இருந்து, அரசின் பயனை அனுபவித்து வருகின்றனர். வாடகை கார் ஓட்டுனர்கள், உறுப்பினராக இணையவில்லை. ஊரடங்கால், 47 நாட்களாக வாடகை வாகனங்கள் இயங்காமல் முடங்கி கிடக்கிறது. அதனால், வேன் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் வருமானமின்றி சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். முறையாக வாகனங்களுக்கு, காப்பீடு செய்துள்ளதால் காப்பீடு நிறுவனங்களிடமிருந்து, உரிய இழப்பீடு தொகை பெற்று தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X