தமிழ்நாடு

சேலத்தில் குறைந்த கொரோனா அச்சம்: சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

Added : மே 12, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில், கொரோனா குறித்த அச்சம் குறைந்துள்ளதால், சாலைகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
உலகத்தை உலுக்கிய கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க, மார்ச், 24 முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒன்றரை மாதங்கள் முடிந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், உயிர் பலி எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அதை மத்திய, மாநில அரசுகள் எதிர்கொள்ள முடிவு செய்துள்ளன. இதையடுத்து, ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. சேலத்தில் நேற்று, 90 சதவீத கடைகள், தொழில்கள் இயங்க தொடங்கின. 'ஏசி' மால்கள், சினிமா தியேட்டர், சலூன் கடைகள் உள்ளிட்டவை மட்டும் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்காத நிலையில், டூவீலர், கார் உள்ளிட்ட தனி வாகனங்கள், சரக்கு வாகனங்களால், சாலைகள் நிரம்பி வழிந்தன. கடை திறப்பு, மூடுவதற்கான நேரம் உள்ளிட்ட கெடுபிடிகளை, நேற்று போலீசார் மேற்கொள்ளவில்லை. இதனால், இயல்பு நிலை திரும்பியது. கடந்த இரண்டு மாதங்களாக பொருட்கள் உற்பத்தி, வாகன போக்குவரத்து, கூரியர் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருந்ததால், லேப்டாப், 'ஏசி', மொபைல்போன்கள் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டது. இதன் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்த விலையை விடவும், 20 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்பனையாகின்றன. பொதுமக்களிடையே, மார்ச் மாதத்தில் நிலவிய கொரோனா குறித்த அச்சம், மெல்ல மெல்ல விலகியுள்ளது. தமிழகத்தில் பெருமளவு பரவாமல் இருப்பதும், பரவிய அக்கம் பக்கத்தினரும் மீண்டு வந்ததும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கேற்றாற்போல், 'கொரோனா வராமல் தடுக்க முடியாது; வாழ பழகிக்கொள்ள வேண்டும்' என்ற மனப்பான்மைக்கு பெரும்பாலானோர் வந்துவிட்டனர். இதனால், அவரவர் தங்களது வழக்கமான தொழில் அல்லது பணியை பார்க்க தொடங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X