பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பற்றி அவதூறு: அ.ம.மு.க., நிர்வாகி மீது வழக்கு

Added : மே 12, 2020
Share
Advertisement

புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் குறித்து, சமூக வலைதளத்தில் அவதூறு பதிவிட்டதாக, அ.ம.மு.க., நிர்வாகி மீது, புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில், கடந்த, 3ல், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கினார். அவர் வழங்கிய அரிசி மூட்டையில், முதல்வர் மற்றும் விஜயபாஸ்கர் படங்கள், இடம் பெற்றிருந்தன. ஆனால், அரிசி மூட்டையில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் பெயருக்கு முன், நாளைய முதல்வர் என கிராபிக்ஸ் செய்து, சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகரச் செயலர் குணசீலன், புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், அ.ம.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலர் முத்துகுமார், 35, அவ்வாறு பதிவிட்டது தெரிந்தது. அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X