பொது செய்தி

தமிழ்நாடு

பெண் போலீஸ் உட்பட இருவருக்கு கொரோனா

Added : மே 12, 2020
Share
Advertisement

மொரப்பூர்: மொரப்பூர் அருகே, சென்னையிலிருந்து வந்த பெண் போலீஸ் உட்பட, இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஜடையம்பட்டியை சேர்ந்த, 23 வயது பெண் ரயில்வேயில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு, கடந்த, 8ல், சென்னையில் கொரோனா தொற்று பரிசோதனை நடந்தது. அவர், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, இருசக்கர வாகனத்தில் சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து, நேற்று மதியம், சென்னையிலிருந்து தர்மபுரி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெண் போலீஸ் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரது குடும்பத்திலிருந்த, நான்கு பேரும் தனிமைப் படுத்தப்பட்டனர். இதேபோல், பொம்மிடி அடுத்த பி.துறிஞ்சிப்பட்டியை சேர்ந்த ஒருவர், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தர்மபுரி மாவட்டத்தில், ஒரே நாளில் இரண்டு பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், ஏற்கனவே, மூவர் கொரோனா தொற்றால் பாதித்த நிலையில், பெண் போலீஸ் உட்பட, இருவருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X