பொது செய்தி

தமிழ்நாடு

வேலூரிலிருந்து மேற்கு வங்காளத்துக்கு 4வது சிறப்பு ரயிலில் 1,142 பேர் பயணம்

Added : மே 12, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூரிலிருந்து புறப்பட்ட நான்காவது சிறப்பு ரயிலில், 1,142 பேர் மேற்கு வங்காளத்துக்கு சென்றனர். வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில், மேற்கு வங்காளம், ஹவுராவை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நேற்று பிற்பகல், 12:00 மணிக்கு, காட்பாடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, மேற்கு வங்காளம், ஹவுராவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில், 1,142 பேர் புறப்பட்டு சென்றனர். மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் உணவு, தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து அவர்களை வழியனுப்பி வைத்தார். மாவட்ட எஸ்.பி., பிரவேஷ்குமார், சப்- கலெக்டர் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர். இதுவரை, காட்பாடியிலிருந்து ஜார்கண்ட், பீஹாருக்கு சென்ற மூன்று சிறப்பு ரயில்களில், 3,516 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X