தமிழ்நாடு

எல்லையில் தொடரும் இ-பாஸ் அனுமதி மறுப்பு: மத்திய அரசு தலையிட மக்கள் கோரிக்கை

Added : மே 12, 2020
Share
Advertisement

ஓசூர்: தமிழகத்திலிருந்து, இ-பாஸ் அனுமதியுடன் சென்றால் கூட, கர்நாடகாவுக்குள் அம்மாநில அரசு அனுமதிக்காமல் திருப்பி அனுப்புகிறது. நாட்டில் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவின் இந்த செயலை, மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழகத்தில், 7,000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு, இ-பாஸ் வாங்கி செல்வோரை, கடந்த, 9 முதல், அம்மாநில அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளி டோல்கேட் அருகே, தமிழகத்திலிருந்து, இ-பாஸ் அனுமதியுடன் வந்த வாகனங்கள், நேற்று மூன்றாவது நாளாக, அம்மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால், தமிழகம், புதுச்சேரியிலிருந்து மருத்துவம், திருமணம், இறப்பு போன்ற காரணங்களுக்காக, இ-பாஸ் பெற்றவர்கள் கர்நாடகாவுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஓசூர் சுற்று வட்டார பகுதி மக்கள் பலர், கர்நாடகாவில் பணியாற்றுகின்றனர். அவர்கள் தற்போது இருசக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல துவங்கி உள்ளனர். அவர்களை கர்நாடகா அதிகாரிகள் தடுக்கின்றனர். இதனால் மக்கள், அத்திப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் தங்கள், இ-பாஸை காண்பித்தும், நிராகரிக்கப்பட்டனர். கர்நாடகா செல்லும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுவதால், ஓசூர், ஜூஜூவாடி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது. பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், 3 கி.மீ., தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்துள்ளன. நாட்டில் வரும், 12 முதல் ரயில் சேவை துவங்க உள்ளது. ஊரடங்கு உத்தரவிலும் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து விட்டது. ஆனால், தமிழகத்திலிருந்து, இ-பாஸ் வாங்கிச் செல்வோரை, கொரோனா நோயாளிகள் போல் பாவித்து, அவர்களை அனுமதிக்காமல் கர்நாடகா அரசு செய்யும் இந்த செயலை, மத்திய அரசு உடனடியாக கண்டித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X