பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கல்

Added : மே 12, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து, ஆணையாளர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், 350 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. உணவுக்கு பிறகு, தினமும் ஒரு வேளை இந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும். குமாரபாளையம் நகரில் அனைத்து தனிக்கடைகளும் அரசு உத்தரவுப்படி திறக்கப்பட்டுள்ளன. தினசரி காய்கறி மார்க்கெட் தனிக்கடை அல்ல. ஆகவே வழக்கம்போல், தினமும் காலை, 6:00 மணி முதல் காலை, 10:00 மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகிறது. பஸ் போக்குவரத்து துவங்கிய பின் இந்நிலையில் மாற்றம் செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X