தமிழ்நாடு

கரூரில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு: கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் உலா

Added : மே 12, 2020
Share
Advertisement

கரூர்: ஊரடங்கு உத்தரவு சற்று தளர்த்தப்பட்ட நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வாகனங்களில் செல்கிறவர்களின், எண்ணிக்கை அதிகரித்தது.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச், 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வரும், 17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நேற்று முதல், 34 வகையான தொழில் நிறுவனங்கள் செயல்படும் வகையில், ஊரடங்கு உத்தரவில் சற்று தளர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, நேற்று, கரூர் நகரில் வணிக நிறுவனங்கள் அதிளகவில் உள்ள ஜவஹர் பஜார், கோவை சாலை மற்றும் தின்னப்பா கார்னர் சாலைகளில், பெரும்பாலான வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. அனைத்து டீ கடைகளும் திறக்கப்பட்டன. மேலும், 'ஏசி' வசதி இல்லாத சிறு அளவிலான துணி கடைகள், நகைக்கடைகளும் திறக்கப்பட்டன. இதனால், கரூர் நகரப்பகுதியில், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. அதேபோல், வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, புலியூர், க.பரமத்தி, தென்னிலை, வேலாயுதம்பாளையம், நொய்யல், சின்னதாராபுரம், வெள்ளியணை உள்ளிட்ட ஊரக பகுதி களிலும் கடைகள் திறக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X