‛சீனாவிடம் கேள்வி கேளுங்க': பெண் நிருபருடன் டிரம்ப் வாக்குவாதம்

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் நிருபர்களுடன் சர்ச்சைக்குரிய வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிபர் டிரம்ப், பாதியிலேயே புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கொரோனா பாதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தினமும் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதிலளிப்பார். நேற்று நடந்த சந்திப்பின் போது,
Trump, china, journalist, Reporter, Ask China, White House, America, Donald Trump, US president, press conference, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, washington, corona in US, world fights corona, டிரம்ப், ரிப்போர்டர், பத்திரிகையாளர், சீனா, அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் நிருபர்களுடன் சர்ச்சைக்குரிய வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிபர் டிரம்ப், பாதியிலேயே புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தினமும் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதிலளிப்பார். நேற்று நடந்த சந்திப்பின் போது, யார் பரிசோதனை செய்து கொள்ள விரும்பினாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். கொரோனா தொற்றால் உயிரிழப்பு கணிசமான அளவிற்கு குறைந்து வருகிறது எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
அப்போது கொரோனா வைரஸ் பரிசோதனை அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து சி.பி.எஸ் நியூஸ் சேனல் நிருபர் வெய்ஜியா ஜியாங், ‛அன்றாடம் அமெரிக்கர்கள் இன்னும் தங்கள் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு நாளும் அதிகமான பாதிப்புகளை நாங்கள் காண்கிறோம். உங்களுக்கு ஏன் உலகளாவிய போட்டியாக தெரிகிறது?,‛ என கேள்வி எழுப்பினார்.


latest tamil news


சீனாவில் பிறந்து தனக்கு 2 வயதான போது, குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறியவரான ஜியாங், 2015 முதல் சி.பி.எஸ் நியூஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார். இதற்கு பதிலளித்த டிரம்ப், ‛உலகில் எல்லா இடங்களிலும் மக்கள் தங்கள் உயிரை இழக்கிறார்கள். நீங்கள் சீனாவிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. என்னிடம் கேட்க வேண்டாம். சீனாவிடம் அந்த கேள்வியைக் கேளுங்கள்' என்றார். வேறு ஏதேனும் கேள்வி உள்ளதா என பத்திரிகையாளர்களை நோக்கி டிரம்ப் கேட்டார். ‛சார், நீங்கள் ஏன் என்னிடம், குறிப்பாக இதைச் சொல்கிறீர்கள்?,' என ஜியாங் மறுபடியும் கேள்வி எழுப்பினார்.


latest tamil news


அதற்கு, ‛மோசமான கேள்வி கேட்கும் எவருக்கும் அவ்வாறு தான் கூறுவேன்,' என்று டிரம்ப் கூறினார். ‛இது ஒரு மோசமான கேள்வி அல்ல,' என ஜியாங் கூறினார். வேறு கேள்விகள் இருக்கிறதா என டிரம்ப் கேட்க, ஜியாங் அருகில் நின்று கொண்டிருந்த சி.என்.என் நிருபர் காலின்ஸ், கையை உயர்த்தினார். ‛நீங்கள் என்னிடம் சுட்டிக்காட்டினீர்கள்' என காலின்ஸ் கேள்வி எழுப்பினார். ‛நான் உங்களிடம் சுட்டிக்காட்டினேன், நீங்கள் பதிலளிக்கவில்லை,' என டிரம்ப் தெரிவித்தார். ஜியாங் தன்னுடைய கேள்வியை முடிக்க காத்திருந்ததாகவும், இப்போது கேள்வி கேட்கலாமா எனவும் காலின்ஸ் வினவினார். உடனே டிரம்ப், ‛பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி' என சொல்லிவிட்டு ரோஸ் கார்டனை விட்டு புறப்பட்டு சென்றார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
14-மே-202021:25:42 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி பொதுவாகவே நேர்மையாகப் பதில் சொன்னால் பல பத்திரிக்கையாளர்களுக்குப் பிடிப்பதில்லை. பாரதம் முதல் அமேரிக்கா வரை எந்த ஊடகக் காரனும் கொராநோவுக்கு சீனாதான் காரணமென்பதை ஏனோ மறைக்கிறார்கள். என்ன நிர்பந்தமோ தெரியவில்லை.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
14-மே-202007:31:00 IST Report Abuse
ocean kadappa india ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு தேசத்திற்கு தேசம் இடத்திற்கு இடம் என அனைத்திற்கும் குரோனா வைரஸ் பரப்பிலில் மனிதரின் பெரும்பங்கை ஈடுபடுத்த சீனா பல ரகசிய வழிகளை பயன்படுத்தி வருகிறது. முதன் முதலில் குரோனா வைரஸை வூஹானிலருந்து வெளியே கொண்டு சென்றவன் யார். அவன் தனியாகவோ அல்லது பலர் சேர்ந்த கும்பலில் ஒருவனாகவோ சென்றானா. அவனை திட்டமிட்டு பரப்ப செய்தவர்கள் யார். சீனாவிலிருந்து முதல் கட்டமாக குரோனா வைரஸ் தோற்றுடன் அமெரிக்கா போன்ற பல வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் யார் யார். அவர்களில் ஆகாய விமானங்கள் தரை வழி போக்கு வரத்துகள் கப்பல் வழிகள் நடை பிரயாணங்கள் என பல வழிகளில் ஊடுறுவியவர்கள் எத்தனை பேர். அதே போல் சீனாவில் குரோனா தொற்று கிளம்பிய நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்குள் நுழைந்தவர்கள் எத்தனை பேர் என்பதெல்லாம் சீனாவுக்கு தெரியும். அவனிடமிருந்து விவரங்களை வாங்கினால் தெரியும். அவன் கேட்டாலும் சொல்வதாக இல்லை.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
14-மே-202006:55:31 IST Report Abuse
ocean kadappa india சீனா வூஹானிலிருந்து குரோனா வைரஸ் உலகெங்கும் காற்றில் பரப்பப் படவில்லை. அப்படி பரப்பினால் அது உலகம் முழுவதும் பரவாது என்ற திருட்டு எண்ணத்தில் மனிதரின் மூச்சு காற்றாக பயன்படும் காற்றின் இறுதி எல்லைக்குள் மனிதருக்கு மனிதர் தாவி பிடிக்கும் நுட்பமான டிஜிட்டல் முறையில் மனிதருக்குள் குரோனாவை பரப்பியுள்ளான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X