பொது செய்தி

இந்தியா

31 நாடுகளுக்கு 149 விமானங்கள்: மத்திய அரசு திட்டம்

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஏர்இந்தியா, வந்தேபாரத்திட்டம், மத்தியஅரசு, விமானங்கள், இந்தியர்கள், வெளிநாடு, Vande Bharat mission, flights, airlines, expats, globally, countries, india, stranded indians, govt of India, india, central govt, delhi, air india express, 31 countries,

புதுடில்லி : வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனை இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. முதல்கட்டமாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர், வெளிநாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் 16 முதல் 22ம் தேதி வரை 31 நாடுகளுக்கு 149 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


latest tamil news



அதில் 13 அமெரிக்காவிற்கும், 11 ஐக்கிய அரபு எமீரேட்சுக்கும், 10 கனடாவுக்கும், சவுதி மற்றும் பிரிட்டனுக்கு தலா 9, மலேஷியா, ஓமனுக்கு தலா 8, கஜகஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு தலா 7 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் உக்ரைன், கத்தார், இந்தோனேஷியா மற்றும் ரஷ்யாவுக்கு தலா 6 பிலிப்பைன்சுக்கு 5, பிரான்ஸ், சிங்கப்பூர், அயர்லாந்து மற்றும் கிரிகிஸ்தானுக்கு தலா 4, குவைத் மற்றும் ஜப்பானுக்கு தலா 2, ஜார்ஜியா, ஜெர்மனி, தஜகிஸ்தான், பஹ்ரைன் மற்றும் அர்மீனியாவிற்கு தலா 2 மற்றும் தாய்லாந்து, இத்தாலி, நேபாளம், பெலாரஸ், நைஜீரியா மற்றும் வங்கதேசத்திற்கு தலா ஒரு விமானம் இயக்கப்பட உள்ளது.


latest tamil news



இரண்டாம் கட்டமாக இயக்கப்படும் விமானங்களில் கேரளாவிற்கு 31, டில்லிக்கு 22, கர்நாடகாவிற்கு 17, தெலுங்கானாவிற்கு 16 குஜராத்திற்கு 14, ராஜஸ்தானுக்கு 1, ஆந்திராவிற்கு 9, பஞ்சாபுக்கு 7, பீஹார் மற்றும் உ.பி.,க்கு தலா 6 ம், ஒடிசாவுக்கு 3, சண்டிகருக்கு 2, காஷ்மீர், ஜெய்ப்பூர், மும்பை மற்றும் ம.பி.,க்கு ஒரு விமானமும் வர உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mahendra - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-மே-202023:21:38 IST Report Abuse
mahendra தமிழகத்திற்கு ஒன்றும் குறிப்பிடவில்லையே ஐயா தமிழக நாடளுமன்ற உறுப்பினர்களே எங்கு உள்ளீர்கள் ? ஏன் ஒரு விமானம் கூட இரண்டாம் சுற்றில் ஒதுக்கப்படவில்லை?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-மே-202023:17:21 IST Report Abuse
தல புராணம் // கடந்த சில நாட்களுக்கு முன்னர், வெளிநாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர் // பாத்து, பாத்து இப்படி பெரிய வடையை வாய்லே சுட்டா வாய் கிழிஞ்சிட போகுது. மொத்தம் விட்டது 17 விமானங்கள். சராசரி 300 பயணிகள் கூட இல்லை. கணக்கு போட்டா 5,000 வருது. அட, ஸ்டாண்டிங், புட்போர்டு ன்னு தொங்கிக்கிட்டு வந்தா கூட 10,000 தாண்டல்ல.. கப்பல்லே 500 பேரு? அப்புறம் எங்கேருந்து ரெண்டு லட்சம் வந்திச்சு ? சின்ன வடையா போடுங்கப்பா..
Rate this:
Cancel
kannan - Chennai,இந்தியா
12-மே-202023:01:10 IST Report Abuse
kannan இன்னுமா தமிழன் இளிச்சவாயன்ன்னு தெரியலையா ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X