குஜராத் அமைச்சரின் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
Gujarat, Education Minister, High Court, Malpractice, Ahmedabad, Supreme court, Bhupendrasinh Chudasama, BJP leader, BJP minister

ஆமதாபாத்: குஜராத் பா.ஜ. அமைச்சர் எம்.எல்.ஏ.வாக வெற்றி செல்லாது எனவும் அவர் போட்டியிட்ட தோல்கா தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்க உத்தரவிட்டு அம்மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் மாநிலத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆமதாபாத் மாவட்டம் தோல்கா சட்டசபை தொகுதியிலிருந்து பா.ஜ. வேட்பாளரான பூபேந்திராசிங் சவுடாஸ்மா என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங். வேட்பாளர் அஸ்வின் ரத்தோட் என்பவரை விட வெறும் 327 ஓட்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இவர் முதல்வர் விஜய் ரூபானி அமைச்சரவையில் சட்டம், நீதித்துறை அமைச்சராக உள்ளார்.


latest tamil news
இந்நிலையில் தோல்வியுற்ற அஸ்வின் ரத்தோட் பூபேந்திராசிங் சவுடாஸ்மா வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு நீதிபதி பரேஷ் உபாத்யாயா முன் விசாரணைக்கு வந்தது .

நீதிபதி தீர்ப்பளித்து, பூபேந்திராசிங் சவுடாஸ்மா, ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடாக வெற்றி பெற்றுள்ளார். இது தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றம். எனவே அவரது வெற்றி செல்லாது. தோல்கா சட்டசபை தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவிக்குமாறு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக பூபேந்திராசிங் சவுடாஸ்மா தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
18-மே-202022:28:32 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி முறைகேடாக வெற்றி பெற்றவருக்கு சட்ட மந்திரியா? விளங்கிடும் நீதி.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-மே-202005:29:13 IST Report Abuse
J.V. Iyer ப.சிதம்பரம் மட்டும் முன்பு எப்படி தப்பித்தார்? ஓஹோ அப்போது கான்-க்ராஸ் ஆட்சியல்லவோ?
Rate this:
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
13-மே-202002:51:00 IST Report Abuse
Dr Kannan மிக்க மகிழ்ச்சி நீதி இறந்துவிடவில்லை இன்னும் மேன்மை தங்கிய நீதி அரசர்கள் இருப்பது நமது இறையaன்மையும் குடியுரிமையும் முழுவதும் சீரழிக்க முடியாது என்பதை காட்டுகிறது. திருக்குறள் 541: ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. உரை: குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X