மே 18க்குப் பிறகு 4வது பொது முடக்கம்: மோடி தகவல்

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
கொரோனா, போராட ஜி.டி.பி.,10 சதவீதம் பயன்படுத்தப்படும்

புதுடில்லி: கொரோனாவை எதிர்த்து போராட ஜி.டி.பி.யிலிருந்து 10 சதவீதம் பயன்படுத்தப்படும். மே 18க்குப் பிறகு மாநில அரசுகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய முறையில் பொது முடக்கம் அமலுக்கு வ/ரும் என பிரதமர் மோடி பேசினார்.

நாடு தழுவிய ஊரடங்கு காலம் நிறைவடைய இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், இன்று மீண்டும் பிரதமர் மோடி டி.வி. வாயிலாக நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

* கொரோனா பாதிப்பு முக்கிய உற்பத்தி துறைகளை ஆட்டம் காண வைத்துள்ளது. மக்களின் உள்ளார்ந்த சக்தியை கொரோனா பாதிப்பு வெளிக்காட்டியிருக்கிறது.


latest tamil news



* இந்தியாவின் வளர்ச்சி 5 முக்கிய கட்டங்களை கொண்டது. அவை, பொருளாதாரம், உட்கட்டமைப்பு, உற்பத்தி தேவை, ஜனநயகம், நவீன தொழில்நுட்பம் ஆகிய 5 அம்சங்களும் அவசியம்.

* கொரோனாவை எதிர்த்து போராட ஜி.டி.பி.யில் 10 சதவீதம் பயன்படுத்தப்படும்.

* உலக நாடுகளுக்கு பொருட்கள், சேவைகளை அளிப்பதில் இந்தியா முக்கிய இடம் பெற வேண்டும் என்பதே இந்திய திட்டத்தின் நோக்கம்.

* கொரோனா பெருந்தொற்று நம்முடன் நீண்ட காலம் இருக்கும். இதிலிருந்து தப்பிக்க முகக்கவசம், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

*4-ம் கட்டமாக நாடு தழுவிய ஊரடங்கு குறித்து மே.18-ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும். இது புதிய முறையில் இருக்கும்.
*உயிர்களை காப்பாற்றும் அதே நேரத்தில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

* இந்தியா தன்னிறைவு நாடாக மாறும். இதை யாராலும் தடுக்க முடியாது. உலகுக்கே இந்தியா வழிகாட்டும். ஒவ்வொரு இந்தியரும் இந்திய பொருட்களை ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-மே-202013:21:48 IST Report Abuse
Sampath Kumar நல்லவரு சொல்லிட்டாரு இழிபிறவிகள் என்று எல்லா அரசியல் வியாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்ட தானே
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
13-மே-202020:58:19 IST Report Abuse
mohan வேலை இன்னும் முடிய வில்லை போலும்....
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
13-மே-202012:48:33 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ கொரோனாவை எதிர்த்து போராட ஜி.டி.பி.யிலிருந்து 10 சதவீதம் பயன்படுத்தப்படும். //// ஐந்து அல்லது ஆறு சதவிகிதம் வேண்டும் என்று காங்கிரஸ் கூறியது... பத்து சதவிகிதம் அறிவித்த பிறகும் திருப்தி இல்லை என்கிறார்கள்... எதிலும் அரசியல் ... இழிபிறவிகள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X