பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் மேலும் 1,026 பேருக்கு கொரோனா

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020
Share
Advertisement
Maharashtra, covid19, coronavirus, Mumbai

மும்பை: மஹா.,வில் புதிதாக 1,026 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 53 பேர் இன்று(மே 12) உயிரிழந்தனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க, மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 4வது முறையாக நீட்டிக்க உள்ளதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.


latest tamil news



நாட்டில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. அங்கு இன்று புதிதாக 1,026 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 53 பேர் பலியாகினர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,427 ஆக அதிகரித்தது; 921 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 339 பேர் குணமாகி வீடு திரும்பியதையடுத்து, குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,125 ஆக அதிகரித்தது. இதனை மஹாராஷ்டிர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


மும்பையில்...

மும்பையில் மட்டும் இன்று புதிதாக 426 பேருக்கு கொரோனா உறுதியானது; 28 பேர் பலியாகினர்; 203 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதனையடுத்து மும்பையில் மொத்த பாதிப்பு 14,781 ஆகவும், மொத்த பலி 556 ஆகவும் உயர்ந்தது. இதுவரை 3,313 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X