தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் 79 பேருக்கு கொரோனா

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து, சில மாவட்ட பகுதிகளில் கூடிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 79 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,275 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் பலிகளின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. 50 கொரோனா நோயாளிகள் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 801 ஆக உயர்ந்துள்ளது. 79 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்பு விகிதம் தொடர்ந்து 62 சதவீதமாகஉள்ளது. தற்போது 444 பேர் கொரோனா பாதிப்புகளுடன் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news



மாநிலத்தில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு நேற்று பதிவாகியதாக கூறப்படுகிறது. ஏப்.,3 ல் 75 பேர் பாதிக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர். நேற்று புதிதாக 79 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவை அனைத்தும் ஐதராபாத்தில் இருந்து பதிவானது. கடந்த 3 நாட்களில் 143 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த 14நாட்களில் தெலுங்கானாவின் 26 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லை. அதன்படி, சங்கரெட்டி, நாகர்கர்னூல், முலுகு, பெடப்பள்ளி, சித்திப்பேட்டை, மகாபூபாபாத், மஞ்சேரியல், பத்ராட்ரி, விகராபாத், நல்கொண்டா, ஆசிபாபாத், கம்மம், நிஜாமாபாத், ஆதிலாபாத், சூர்யாபேட்டை, நாராயன்பேட்டை, வாரங்கல் நகர, ஜங்கல் நகரம் ஆகியவை அடங்கும்.

மேலும் நேற்று குணமடைந்த 50 நபர்களில் 42 பேர் ஐதராபாத்தையும் , 4 பேர் சூர்யாபேட்டையையும், நிர்மல் , ஆசிபாபாத், மேட்சல் மற்றும் கரீம்நகர் மாவட்டங்களில் தலா ஒருவரும் அடங்குவார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X