பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்களை கவுரவப்படுத்திய சேவாபாரதி

Added : மே 12, 2020
Share
Advertisement
 துாய்மை பணியாளர்களை  கவுரவப்படுத்திய சேவாபாரதி

பந்தலுார்:பந்தலுார் அருகே, அய்யன் கொல்லியில் சேவா பாரதி சார்பில், சேரங்கோடு ஊராட்சியின் பணியாற்றும் பணியாளர்கள் கவுரப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகி மனோஜ்குமார் வரவேற்றார். ஆசிரியர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்ததுடன், துாய்மை பணியாளர்களுக்கு போர்வை போர்த்தி கவுரவப்படுத்தினார். தொடர்ந்து, சேவாபாரதி நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களின் பாதங்களைக்கழுவி, அவர்களின் கெரோனா தடுப்பு பணிக்கு நன்றி தெரிவித்தனர்.அதனை அடுத்து, அனைவருக்கும் அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய உணவு தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, சேரங்கோடு ஊராட்சிமன்ற தலைவர் லில்லி, துணை தலைவர் சந்திரபோஸ், சேவாபாரதி நிர்வாகிகள் சுரேஷ், மோகன்தாஸ், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் உன்னிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X