பொது செய்தி

தமிழ்நாடு

நெருக்கடி சூழலில் கல்வி சவால்கள் :காணொளியில் பயனுள்ள கருத்தரங்கு

Added : மே 12, 2020
Share
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரியில்,'இன்றைய நெருக்கடி சூழலில் கல்வியும்; சவால்களும்,' என்ற தலைப்பில், காணொளி கருத்தரங்கு நடந்தது.புதுவை அரசு பள்ளி பாதுகாப்பு இயக்க பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் மாநில தலைவர் மணி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆசிரியர் ராஜூ ஆகியோர் முன்னிலையில், பல்வேறு கல்வியாளர்கள் மூலம், கருத்துக்கள் பரிமாறப்பட்டன.அதில், இடம் பெற்ற கருத்துகள்:பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ள நிலையில், ஏழை எளிய மாணவர்களின் உடல் நலம், மனநலம் குறித்து, ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு கவுன்சிலராக செயல்பட்டு மாணவர்களின் பிரச்னைகளை மொபைல்போன் மூலம், அறிந்து நிவாரணம் வழங்குவது;கொரோனா பாதிப்பால், பொருளாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால், அரசு பள்ளிகள் மூடப்படாமல் பார்த்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு ஆசிரியரும் தலா, 25 மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க முயற்சி எடுக்க வேண்டும்; 'ஆன்லைன்' கல்வி எந்த அளவிற்கு பொருத்தமானது என்பதை தெளிவுபடுத்துவதுடன், இதனை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் மாணவர்களின் கடந்த ஆண்டின், கல்வி பாக்கியை வசூலிக்கும் முடிவைஆராய்ந்து, பெற்றோருக்கு உதவ வேண்டும். இப்பிரச்னைகள் குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தோழமை கல்வி இயக்கங்களுடன் இணைந்து, அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X