சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

சரணடைந்து விட்டாரா?

Added : மே 12, 2020
Share
Advertisement
 சரணடைந்து விட்டாரா?

சரணடைந்து விட்டாரா?
சின்ன விஷயத்துக்கு கூட, மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிடும் ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கேலாட், சமீப காலமாக அமைதி காப்பதை பார்த்து, அதிர்ந்து போயுள்ளனர், காங்., மூத்த தலைவர்கள். 'மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காங்., ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ., தயாராகி வருகிறது' என, இரண்டு மாதங்களுக்கு முன், தொடர்ச்சியாக செய்திகள் வெளியாயின. இதனால் தினமும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து வந்தார் கேலாட். ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுடனும், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தியதில் இருந்து, கேலாட்டிடம் இருந்து, எந்த சத்தத்தையும் காணோம். அந்த கூட்டத்தின் போது, ராஜஸ்தானில் தொழிலாளர்கள் வேலை நேரத்தை அதிகரித்த, கேலாட்டின் நடவடிக்கையை பெரிதும் பாராட்டினார் மோடி. தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்குச்
செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை, முதன் முதலாக எழுப்பிவயரும் கேலாட் தான். அதற்கும், அவரை பிரதமர் பாராட்டினார். இதற்குப் பின், பிரதமர் மீதான விமர்சனத்தை நிறுத்தி விட்டார் கேலாட். 'பிரதமரிடம் சரண் அடைந்து விட்டீர்களா...' என, கட்சி பிரமுகர்கள் கேட்டபோது, 'கொரோனா விஷயத்தில் அரசியல் வேண்டாம் என்ற நல்ல எண்ணம் தான் காரணம்' என்கிறார் கேலாட்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X