வீடு திரும்பினார் மன்மோகன் சிங்| Dinamalar

வீடு திரும்பினார் மன்மோகன் சிங்

Added : மே 12, 2020 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி : உடல்நலக் குறைவால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த, காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், 87, நேற்று வீடு திரும்பினார். கடந்த, 2004 முதல், 2014 வரை பிரதமராக இருந்த, காங்., மூத்த தலைவர், மன்மோகன் சிங், உடல்நலக் குறைவால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை

புதுடில்லி : உடல்நலக் குறைவால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டிருந்த, காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், 87, நேற்று வீடு திரும்பினார்.

கடந்த, 2004 முதல், 2014 வரை பிரதமராக இருந்த, காங்., மூத்த தலைவர், மன்மோகன் சிங், உடல்நலக் குறைவால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.'அவருக்கு புதிய மருந்து கொடுக்கப்பட்டது. அது ஒத்துக் கொள்ளாததால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்' என, டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். அவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது, பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த நிலையில், அவர் முழு குணம் அடைந்ததால், நேற்று வீடு திரும்பினார். பல்வேறு தரப்பினர், அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X