சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

2 நாளில் லட்சக்கணக்கில் அள்ளிய டாஸ்மாக் ஊழியர்கள்!

Added : மே 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 2 நாளில் லட்சக்கணக்கில் அள்ளிய டாஸ்மாக் ஊழியர்கள்!

2 நாளில் லட்சக்கணக்கில் அள்ளிய டாஸ்மாக் ஊழியர்கள்!
''வழக்கை பத்தி கண்டுக்கவே இல்லைன்னு வருத்தப்படுதாவ வே...'' என, குப்பண்ணா வீட்டு திண்ணையில், அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார்,
அண்ணாச்சி.''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை கண்டிச்சு, போன, 7ம்
தேதி, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்புல, அவங்கவங்க வீட்டு வாசல்ல, கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செஞ்சாங்கல்லா...
''கடலுார் மாவட்டம், சிதம்பரம் பக்கம், கீரப்பாளையத்துல இருக்கிற தன் வீட்டு முன்னாடி, தமிழக காங்கிரஸ்
தலைவர், அழகிரி கறுப்பு கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் செஞ்சாரு வே... ''ஊரடங்கை மீறி, ஆர்ப்பாட்டத்துல அஞ்சு பேருக்கு மேல கலந்துக்கிட்டதா,
அழகிரி மேல போலீசார் வழக்குப் பதிவு பண்ணிட்டாவ... இதுக்கு, கூட்டணிக் கட்சி தலைவருங்கிற முறையில, ஸ்டாலின் எந்த
கண்டனமும் தெரிவிக்கல வே...''ஏற்கனவே, உள்ளாட்சி தேர்தலப்ப, தி.மு.க.,வை அழகிரி விமர்சனம் செஞ்ச கோபத்தை, ஸ்டாலின் இன்னும் மறக்கலை... அதான், அழகிரி மீதான வழக்கை கண்டுக்கலைன்னு, காங்கிரசார் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பீருக்கும் விலையை ஏத்தி வித்திருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''டாஸ்மாக்
மேட்டரா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''ஆமாம்... கடைகளை திறக்கிறதுக்கு முன்னாடியே, குவார்ட்டருக்கு, 10 முதல், 20 ரூபாய் வரை விலையை ஏத்தினாளோல்லியோ... ஆனா, பீர் விலையை ஏத்தலை ஓய்...
''இப்ப, பீருக்கும், 10 ரூபாய் கூடுதல் விலை வச்சு, டாஸ்மாக் ஊழியர்கள் வித்திருக்கா... ஆய்வுக்கு போன அதிகாரிகள் கண் முன்னாடியே இது நடந்துது... அவா எதையும் கண்டுக்கலை... அதுக்கான கமிஷனும், அவாளை தேடி
வந்துடுத்து ஓய்...'' என்றார் குப்பண்ணா.''இதுவும் டாஸ்மாக் தகவல் தான் பா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்த அன்வர்பாயே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மேற்கு மாவட்டத்துல, 132 மதுக் கடைகள் இருந்தாலும், கொரோனா பாதிப்பு அதிகம்
இல்லாத பகுதிகள்ல இருந்த, 40 கடைகளை மட்டும் தான், ரெண்டு நாளா திறந்தாங்க...''இந்தக் கடைகள்ல மட்டும், ரெண்டு நாள்ல, 7.50 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்திருக்கு... இந்தக் கடைகளின் ஊழியர்கள் எல்லாம், குவார்ட்டருக்கு, 20ல இருந்து,
50 ரூபாய் வரைக்கும் கூடுதல் விலைக்கு வித்திருக்காங்க பா...''ஒரு சிலர் தட்டிக் கேட்டப்ப, 'கடைகளை திறக்காம இருந்தப்ப, குவார்ட்டரை, 400 - 500 ரூபாய்க்கு வாங்கி குடிச்சீங்களே... இப்ப, 50 ரூபாய்க்கு கணக்கு பார்க்கணுமா...
''இஷ்டம் இருந்தா வாங்குங்க... இல்லாட்டி போங்க'ன்னு விரட்டாத குறையா வசூல் பண்ணியிருக்காங்க பா...''இப்படி, ஒவ்வொரு கடைகள்லயும், ரெண்டு நாள்ல மட்டும், பல லட்சம் ரூபாயை ஊழியர்கள் அள்ளிட்டாங்க... ஒரு சில ஊழியர்கள், கடைகளை மூடுன பிறகு, மது பாட்டில்களை எடுத்துட்டு போய், கூடுதல்
விலைக்கும் வித்திருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.''அது சரி... தேன் பானையில கையை விட்டவன், சும்மாவா இருப்பான்...'' என, அலுத்தபடியே
அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-மே-202005:56:39 IST Report Abuse
D.Ambujavalli இவர்களுக்கு தீபாவளி, பொங்கல் போனஸ் எல்லாம் இந்த இரண்டு நாளிலேயே கிடைத்திருக்கும். அரசுக்கு எழுநூறு கோடி என்றால் இவர்களுக்கு ஏழாவது கிடைக்க வேண்டாமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X